districts

சாதி, ஆளும் கட்சி ஆதிக்கத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழுக்களா?

திருப்பூர், டிச.4- பள்ளி மேலாண்மைக் குழுக்களில் சாதி மற்றும் ஆளும் கட்சியின் ஆதிக் கம் உள்ளது. இதை நிவர்த்தி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத் துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், கல்வி உரிமைச் சட்ட விதிமுறைகளின் படி தமிழ்நாட் டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளி லும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில்  20 உறுப்பினர்கள், அதில், 15 பெற்றோர் கள், குழுவின் தலைவராக பெற்றோர் உறுப்பினர்களில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். மேலும், இக் குழுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர்  மற்றும் ஒரு ஆசிரியர், பள்ளி அமைந் துள்ள பகுதியைச் சேர்ந்த இரண்டு உள் ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கல்வி  ஆர்வலர் ஒருவர், மகளிர் சுய உதவிக்  குழுவில் உள்ள பெற்றோர் ஒருவர் இடம்பெறும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. மேலும், 20 உறுப் பினர்களில் 10 பேர் பெண்களாக இருக்க  வேண்டும் எனவும் உள்ளது. ஆனாலும்  சில அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண் மைக் குழுக்கள் செயல்படுவதில் சில  சிக்கல்கள் உள்ளன. மேலும் ஜனநாயக  முறைப்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெ டுக்க பட வேண்டிய பள்ளி மேலாண் மைக் குழுவின் தலைவர்கள் அப்படி  தேர்ந்தெடுக்கப்படாமல், உள்ளூர் ஆளும் கட்சியை சேர்ந்த தலைவர்கள்  மேலாண்மைக் குழுவின் தலைவர்க ளாக ஆக்கப்படுகின்றனர். பல பள்ளி  மேலாண்மைக் குழுக்களின் செயல்பா டுகள் இன்னமும் ஆரம்ப நிலையில் தான் உள்ளன. இதை முறையாக சரி  செய்ய வேண்டும் அப்போது தான்,  அன்றாடம் பள்ளிகளுக்கு வரும் மாணவ,  மாணவியர்களின் தேவையை பூர்த்தி  செய்ய முடியும். குறிப்பாக ஆசிரியர்  காலிப்பணியிடங்கள் நிரப்புவது, பள்ளி  கட்டமைப்புகளை மேம்படுத்துவதற் காக நிதி திரட்டுவது உள்ளிட்டவைகள் முடங்கி கிடக்கிறது. குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவது இருக்கிறது. இதை ஒழுங் குப்படுத்த இட ஒதுக்கீடு வழங்கலாம்  என பெற்றோர்கள் சிலர் கருதுகின்றனர்.  மேலும்,  பல அரசு பள்ளிகளில் கழிவறை கள் முறையாக பராமரிக்கப்படுவ தில்லை என புகார்கள் உள்ளது. மேலும்,  கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிக ளுக்கு காலை நேரங்களில் போதுமான அரசு பேருந்து இயக்கப்படாததால் மாணவர்கள் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதுபோல் எண் ணற்ற பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய  மேலாண்மைக் குழுக்களின் தேவையும்  அதிகமாக உள்ளது எனவே இதுகு றித்து பள்ளி கல்வித் துறை ஆலோசிக்க  வேண்டும் என கூறினர்.