வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கோவை, பிப்.26- வால்பாறையில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு உள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதியில் வால்பாறைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செக்டேம் பல லட்சம் ரூபாய் செலவில் சுத்தி கரிப்பு செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் வறட்சி காரணமாக நீர் வரத்து குறைவதால் வரும் காலங்களில் வால்பாறை பகுதியில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் தண்ணீர் இன்றி தவிக் கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. அப்பகுதிக்கு மூன்றாம் நிலை குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டு கள் ஆகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, இதனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வா கம் அப்பகுதியில் உள்ள செக்டேமை தூர்வாரி, நீரை அதிகளவில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகுவதை தடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என வால்பாறை பகுதி பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
யானை தந்தம் விற்க முயற்சி: 8 பேர் கைது
சேலம், பிப்.26- சேலம் புதிய பேருந்து நிலையத்தில் யானை தந்தங்களை ஒரு கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற 8 பேரை வனத்துறை யினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலத்தில் யானை தந்தங்கள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், தெற்கு வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் 15 பேர் கொண்ட தனிப்படை யினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு யானை தந்தங்களைக் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் உடனடியாக புதிய பேருந்து நிலையத்துக்கு சென்ற தனிப்படையினர், அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரைப் பிடித்து விசாரித்தனர். அதில், இருவரும் யானை தந்தத்தை விற்க வந்ததும், தந்தங்களை கருமந்துறையில் பதுக்கி வைத் திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படையினர் கருமத்துறைக்குச் சென்று அங்கு ஒரு வீட்டில் பதுக்கி வைத் திருந்த 2 தந்தங்களை பறிமுதல் செய்தனர். இதன்பின் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, யானை தந்தங்களை விற்க முயன்ற சேலம், கருமந்துறையைச் சேர்ந்த முரளி (28), சங்கர் (35), பாலு (31), சக்திவேல் (48), ஜெகநாதன் (46), ராஜீவ்காந்தி (34), கிருஷ்ணன் (76), இளங்கோவன் (56) ஆகிய 8 பேரை கைது செய்தனர். யானை தந்தங்களை வாட்ஸ்அப் குழு மூலம் ரூ.ஒரு கோடிக்கு விற்க முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 8 பேரையும் சேலம் நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
மாணவர் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்
நாமக்கல், பிப்.26- ராசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாண வர் ஒருவர், கழிப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், அவரது உறவினர் கள் மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் எல்ஐசி காலனியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் கவின்ராஜ் (14), ராசிபுரம் சிவானந்தா சாலையிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி யில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந் நிலையில், புதனன்று வழக்கம்போல் பள் ளிக்கு சென்ற அவர், பள்ளி இடைவேளையில் கழிப்பறைக்குச் சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரி ழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகு றித்து தகவலறிந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராசிபுரம் அரசு மருத்து வமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற் பட்டது. போலீசார், கல்வித்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யானையின் முன் இளைஞர்கள் சாகசம்
ஈரோடு, பிப்.26- ஆபத்தை உணராமல் காட்டு யானையின் அருகே சென்று சாகசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட இளை ஞர்களை மீனவர்கள் எச்ச ரித்து அனுப்பினர். ஈரோடு மாவட்டம், சத்தி யமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வறட்சி நிலவ தொடங்கியுள்ளதால் காட்டு யானைகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி பவானி சாகர் அணையின் கரையோ ரப் பகுதியில் உள்ள முட்புதர் காட்டில் முகாமிடத் தொடங் கியுள்ளன. இந்நிலையில், புதனன்று காலை பவானி சாகர் அணையின் கரையில் காட்டு யானைகள் நடமா டின. அப்போது அங்கு இருந்த இரண்டு வாலிபர்கள் ஆபத்தை உணராமல் காட்டு யானையின் அருகே செல்ல முயற்சித்தனர். இதையடுத்த அப்பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர் கள் வாலிபர்களை யானைக ளின் அருகே செல்ல வேண் டாம் என எச்சரித்ததை தொடர்ந்து அவர்கள் அப்பகு தியில் இருந்து வெளியேறி னர். பவானிசாகர் அணை யின் கரையோரப் பகுதியில் குடிநீர் தேடி காட்டு யானை கள் முகாமிடுவதால் அப்பகு தியில் பொதுமக்கள் யாரும் நடமாடக்கூடாது, என வனத் துறையினர் அறிவித்துள்ள னர்.
அமைதி பேச்சுவார்த்தை நடத்தக் கோரிக்கை
அமைதி பேச்சுவார்த்தை நடத்தக் கோரிக்கை திருப்பூர், பிப்.26 - அவிநாசி அனைத்து கட்சி நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவிநாசி ஆகாச ராயர் கோயில் பிரச்சனையில் இருத ரப்பினர் இடையே சமூக அமைதி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவ டிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
மங்கலத்தில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் ஏற்படுத்தக் கோரிக்கை
திருப்பூர், பிப்.26 - திருப்பூர் ஒன்றியத்தில் உள்ள மங்க லம் கிராமத்தில் புதிய பத்திரப் பதிவு அலு வலகம் ஏற்படுத்த வேண்டும் என்று திருப்பூர் வருவாய் கோட்ட விவசாயி கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை விவசா யிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. தார் சாலை அமைக்க கோரிக்கை இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க வடக்கு ஒன்றியச் செய லாளர் எஸ். அப்புசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பொங்குபாளை யம் ஊராட்சியைச் சேர்ந்த பரமசிவம்பா ளையம் கருப்பராயன் கோவில் அரு கில் உள்ள குட்டையில் இருந்து பச்சாம் பாளையம் மற்றும் பைபாஸ் செல்லும் சாலை உள்ளது. இங்கிருந்து இணை யும் பழங்கரை ஊராட்சி மண் சாலையை தார் சாலையாக மாற்றித் தரும்படி தமிழ் நாடு விவசாயிகள் சங்க வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.அப்புசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சாலையில் விவசாயிகள் காய் கறிகளை கொண்டு செல்வதுடன், மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்வதற்கும், தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்கும் பயன்படுத் துகின்றனர். குண்டும் குழியுமாக உள்ள மண் சாலையில் வண்டி வாகனங்களில் செல்வது மிகவும் சிரமமாக இருப்பதால் பழங்கரை ஊராட்சியின் மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை யும் இல்லை. எனவே வருவாய் கோட் டாட்சியர் தலையிட்டு மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அப்புசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார். பத்திரப்பதிவு அலுவலகம் மங்கலம் கிராம நீரினை பயன்ப டுத்தும் பாசன விவசாயிகள் நல சங்கத் தின் தலைவர் சி.பொன்னுசாமி, திருப்பூ ரில் வருவாய் கோட்டாட்சியர் நடத்திய விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அளித்த கோரிக்கை மனு வருமாறு: மங்கலம், இடுவாய், ஆண்டிபாளை யம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பத்திரம் பதிவு செய்வ தற்கு 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெருப்பெரிச்சல் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்ல வேண்டி உள் ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எனவே மேற்படி கிராமங்களை உள் ளடக்கி அத்துடன் 63 வேலம்பாளையம், வஞ்சிபாளையம், செம்மாண்டம்பா ளையம், பூமலூர் போன்ற கிராமங்க ளையும் ஒன்றிணைத்து மங்கலத்தில் ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தை புதி தாக உருவாக்கினால் விவசாயிகள் பொதுமக்கள் பயனடைவார்கள் என்று பொன்னுசாமி கூறியுள்ளார்.
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் உதகை, பிப்.26- வழக்கறிஞர்கள் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து உதகையில் வழக்கறி ஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு புதிதாக வழக்கறிஞர்கள் சட்ட திருத்த மசோதா ஒன்றினை அமலுக்கு கொண்டு வந்தது. இதனைக் கண்டித்து தமிழ்நாடு முமூவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் புதனன்று புதிய சட்ட திருத்த மசோ தாவை ஒன்றிய அரசு திரும்ப பெறக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
மாநில அளவிலான சிலம்பம் போட்டி
மாநில அளவிலான சிலம்பம் போட்டி நாமக்கல், பிப்.26- ராசிபுரம் அருகே நடைபெற்ற மாநில அளவிலான சிலம் பம் சாம்பியன்ஷிப் போட்டியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த காக்காவேரி பகுதி யில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், மாநில அள விலான 5 ஆம் ஆண்டு சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி புதனன்று நடைபெற்றது. இப்போட்டியை கல்லூரி சேர்மன் பிரேம்குமார், சிலம்பம் பயிற்சியாளர் பன்னீர் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். தொடுபுளி, தனித்திறமை சிலம்பம் சுற்று தல், வாழ்வீச்சு என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் சென்னை, கோவை, திருச்சி, தருமபுரி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றி காண்போரை அசத் தினர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பைகளும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன.
கழிவுநீர் வெளியேற வழியின்றி குடியிருப்பு வாசிகள் தவிப்பு
தருமபுரி, பிப்.26- தருமபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கழிவுநீர் கால் வாய் மூடப்பட்டதால், வீடுகளிலிருந்து கழிவுநீர் வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். தருமபுரி நகராட்சி, 26 ஆவது வார்டுக்குட்பட்ட வேடி யப்பன்திட்டு பகுதியில் அண்மையில் புதைசாக்கடைத் திட் டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளுக்காக சாலையின் இருபுறமும் தோண்டப்பட்டு மண் கொட்டப்பட் டுள்ளது. இதனால் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த கழிவுநீர் கால்வாய் மூடப்பட்டது. பணிகள் தொடங்கி சில நாள்களாகி யும் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளிலிருந்து கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. அதேபோல பல வீடுகளில் குடிநீர் குழாய்களும் உடைப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நக ராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், எந்தவித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொது மக்கள் கழிவுநீர் வெளியேற வழியின்றியும், வீடுகளுக்குச் செல்ல பாதை வசதி இன்றியும் தவிப்புக்குள்ளாகி வரு கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத் தியுள்ளனர்.