districts

img

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: தயார் நிலையில் மீட்புப்படையினர்

கோவை, ஜூலை 5- வால்பாறை பகுதியில் விடிய விடிய கனமழை பெய் ததால் ஆறுகளில் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. இதனால் பேரிடர் மீட்பு  படை போலீசார் தயார் நிலை யில் உள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறையில் இரவு பக லாக பலத்த மழை பெய்து  வருகிறது. இதன் காரணமாக வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கூழாங்கல்  ஆறு, நடுமலை ஆறு ஆகியவற்றில் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் உத்தரவின்  பேரில் மாநில பேரிடர் மீட்புப்படை  துணை காவல் கண்காணிப்பாளர் குமார்  தலைமையில், மிதவை படகுகள் மற்றும்  மீட்பு உபகரணங்களுடன் 100 போலீசார்  வால்பாறையில் முகாமிட்டு உள்ளனர். பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா மீட்புப் படையினரை சந்தித்து, மழை வெள்ளத்தால்  பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாது காப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்  என்று அறிவுறுத்தினார். மழை காரணமாக வால்பாறை - பொள் ளாச்சி மலைப்பாதையில், சோலைகுறுக்கு என்ற இடத்தில் மரம் விழுந்தது. இதனால் அங்கு 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இதையறிந்த தீயணைப்பு வீரர் கள் விரைந்து சென்று, சாலையில் முறிந்து  விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பிறகு போக்குவரத்து சரியானது. அய்யர் பாடி எஸ்டேட் புனித வனத்துச்சின்னப்பர் ஆலய வளாக சுற்றுச்சுவர்,

மழையில் நனைந்து இடிந்து விழுந்தது. சோலையாறு அணைக்கு விநாடிக்கு 2 ஆயிரத்திற்கு மேற் பட்ட கனஅடி தண்ணீர் வந்து  கொண்டிருப் பதால், ஒரே இரவில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதியன்று சோலையாறு அணையின் நீர்மட்டம் 117 அடியை தாண்டி  இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு தென் மேற்கு பருவமழை தீவிரம் அடையாமல் உள்ளது. ஆனாலும்,  கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரு கிறது. இது தொடரும் பட்சத்தில் சோலை யாறு அணைக்கு நீர் வரத்து மேலும் அதி கரிக்க வாய்ப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது ஆற்றங்கரையோர குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை பாது காப்பான இடத்தில் தங்க வைக்க நிவாரண  முகாம்களும், அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தின் மருத்துவ குழுவினரும் உஷார் நிலை யில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கோவை குற்றாலம் செல்ல தடை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் காரணமாக அருவிகளில் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை மாவட்டத்தின் பிரசித்திபெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான கோவை குற் றாலத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். அருவி யில் மழைநீருடன் சிறு பாறைகளும், கற் களும் வர வாய்ப்புள்ளதால் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக இந்த தடை விதிக் கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரி வித்துள்ளனர்.

கவியருவிக்கும் தடை

கடந்த ஆறு மாதங்களாக வெயிலின் தாக்கத்தினால் வறட்சியிலிருந்த கவிய ருவிக்கு, தற்போது அதிகளவில் பெய்து  வரும் மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் கவிய ருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இது குறித்து பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி  கூறுகையில், அருவியின் நீர்வரத்தை பொறுத்து சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் படுவர். அதேசமயம் தடை நீங்கி அருவிக்கு  வருபவர்கள், தங்கள் கொண்டு வரும்  உணவு, பாலிதீன் பைகளை வனப்பகுதிக் குள் கொண்டு வரக்கூடாது என தெரிவித் தார்.