உடுமலை, நவ.5- உடுமலைப்பேட்டை அருகே ஜம் புக்கல் மலையைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வகை மாற்றம் செய்து, வனத்துறை கட்டுப்பாட்டில் எடுத்து, மலைவாழ் மக்கள் வாழ்விடமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. உடுமலை வட்டம் ஆண்டியகவுண் டனூர் ஊராட்சியில் சுமார் 2920 ஏக்கர் பரப்பளவு மலைப்பகுதியில் விவசாயி கள் பயன்படுத்தும் வகையில் சமதள நிலத்தை 1970ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் சுமார் 300 குடும்பத்திற்கு 0.50 சென்ட் முதல் 2.20 ஏக்கர் வரை விவசா யப் பயன்பாட்டிற்கு அரசு நிபந்தனை பட்டா வழங்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுகள் மழையில்லாமல் போன தால் ஜம்புக்கல் மலைப்பகுதியில் இருந்து விவசாயிகள் வெளியேறிதைப் பயன்படுத்தி தற்பொழுது தனி நபர்கள் சிலர் தங்களுடைய பெயரிலும், தங்க ளது குடும்பத்தின் பெயரில் ஆவணம் தயாரித்து மலைப்பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அப்பகுதி விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வர், வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பல கட்ட போராட்டங்க ளைத் தொடர்ச்சியாக நான்கு ஆண்டு நடத்தினார்கள். மேலும் பல கட்டப் போராட்டம் நடத் தியும் தற்பொழுது வரை மலைப்பகுதி யில் இருக்கும் தனியார் ஆக்கிரப்பு களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், புதன்கிழமை வரு வாய் கோட்டாட்சியர் தலைமையில் ஆண்டியகவுண்டனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஜம்புக்கல் மலைப் பகுதி ஆக்கிரமிப்பு குறித்து பட்டா வைத் துள்ள நபர்களிடம் விசாரணை நடை பெற்றது. இந்நிலையில் வருவாய்த்துறை யின் கட்டுபாட்டில் இருக்கும் மலைப்ப குதியை பாதுகாக்கப்பட்ட வனத்துறை யாக வகை மாற்றம் செய்து, மலைப் பகுதியை பாதுகாக்கும் வகையில், அம ராவதி பகுதியில் இருக்கும் மலை வாழ் மக்களுக்கு குடியிருப்பு பகுதி யாக மாற்ற வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை வைத்து உள்ள னர்.