பொள்ளாச்சி, ஜன.20- பொள்ளாச்சி - கோவை சாலையிலுள்ள சி.டி.சி மேடு பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் நீதிமன்ற வளாகத்தில் சட்டமேதை அம்பேத்கரின் உருவச்சிலை அமைக்க வேண்டும், என சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சி கள் கோரிக்கை விடுத்துள்ளன. பட்டியலின மக்களின் சமூக முன்னேற்றத்திற்கும், இந்தியாவில் சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்கா கவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்த அண்ணல் அம் பேத்கர், இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பெண்களின் உரிமை மீட்பர் ஆவார். நவீன இந்தியாவின் சிற்பி என்றழைக்கப்படும், டாக்டர் அம் பேத்கரின் பிறந்த நாள் தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய புகழ்மிக்க அம்பேத்கர் அவர்களுக்கு பொள்ளாச்சியில் அவரு டைய உருவச்சிலையை நிறுவ வேண்டும் எனக்கோரி அம்பேத்கரிய, பெரியாரிய மற்றும் முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் சிலை அமைக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. பொள்ளாச்சியில் அண்ணல் அம்பேத்கர் சிலை இல்லாமல் பார்த்துக் கொள்வது நவீன தீண்டாமை வெளிப்பாடு ஆகும். எனவே, சமூகம் அவர்கள் தலையீடு செய்து இந்த நவீன தீண்டாமையை உடைத்து அண்ணல் அம்பேத்க ரின் சிலையை பொள்ளாச்சி சி.டி.சி மேடு பகுதியில் புதிய தாக கட்டப்பட்டு வரும் நீதிமன்றத்தின் வளாகத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத் தைகள் கட்சி சார்பில் திங்களன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், சிபிஎம் பொள்ளாச்சி தாலுகா செய லாளர் மூ.அன்பரசன், தாலுகாக்குழு உறுப்பினர் கே. மகாலிங்கம், விசிக மாவட்டச் செயலாளர் சி.அசோக் குமார், ஆதித்தமிழர் பேரவை கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தி.செ.கோபால், தமிழ் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் பெ.வானுகன், அமைப்புசாரா தொழிலாளர் விடுதலை முன்னணி வே.தமிழ் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.