districts

img

கொள்ளிடம் ஆற்றுச் சாலையோர சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

சீர்காழி, ஏப்.28-நாகை மாவடட்ம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை ஒட்டியுள்ள சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சீமைக்கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. இந்த மரங்களால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மிக ஆழத்தில் உள்ள நிலத்தடி நீரையும் உறிஞ்சி உயிர்வாழும் தன்மை கொண்ட இந்த மரங்கள்உள்ள பகுதியில் வேறு எந்த பயனுள்ளதாவரங்களோ மரங்களோ வளர்வது இல்லை என்று தாவரவியல் நிபுணர்கள்எச்சரிக்கின்றனர்.இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டியுள்ள பகுதியில்உள்ள மரங்களால் நிலத்தடி நீரும் கிடைக்காமல் மாசுபட்டுள்ளது. மேலும் ஆற்றின் வலது கரை சாலையிலும் நீண்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. விறகுக்கு கூட பயன்படாமல் உள்ள இந்த சீமை கருவேல மரங்களை முற்றிலும் அழித்து விட்டு பயன் தரக் கூடிய மரக்கன்றுகளை சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் நட்டு பராமரிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.