உடுமலை, ஜன.1 - இயற்கையாக உள்ள நீர் வழித்த டங்களை ரியல் எஸ்டேட் முதலாளிகள் அழித்து, வீட்டு மனைகளுக்கு சாலை மற்றும் பூங்கா அமைப்பதால், மழை நீர் குடியிருப்பு பகுதிக்குள் வரும் அபா யம் ஏற்பட்டுள்ளது. உடுமலை மற்றும் மடத்துக்கு ளத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளன. தற் போது, ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி யால் விளைநிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகி றது. இந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலில் பெரிய நிறுவனங்கள் நேரடி யாக வீட்டுமனை விற்பனையில் ஈடுபட் டுள்ளனர். இவர்கள் சட்ட விதிகளை மதிக்காமல் விளைநிலங்களை வீட்டும னைகளாக பிரித்தபோது, இப்பகுதி யில் இயற்கையாக இருக்கும் நீர் வழித் தடங்களை அழித்து, சாலை, பூங்கா உள்ளிட்டவைகளை அமைத்துள்ள னர். பல ஆண்டுகளாக இயற்கையாக இருக்கும் நீர்வழித்தடங்கள் அனைத் தும், அருகில் உள்ள குளங்களுக்கு செல்லும் வகையில் உள்ளதை, தங்க ளின் சுயநலத்திற்காக அழிப்பதால் மழைநீர் செல்ல வழியில்லாமல் நீர் குடியிருப்பு பகுதிக்கு வரும் நிலை ஏற் பட்டுள்ளது. வீட்டுமனைகளை விற் பனை செய்ய அரசின் அனுமதி பெற பல கட்டுப்பாடுகள் உள்ள போதும், முறை யாக ஆய்வு செய்யாமல் அனுமதி வழங் கப்பட்டுள்ளது. இதை மீண்டும் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர் வழித்தடங்களை மீட்க வேண்டும். இல்லை எனில் பிற்காலத்தில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பெரும் விபத்துகள் ஏற்படும். எனவே இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.