தாராபுரம், செப். 22 - தாராபுரம் தலைமை தபால் நிலையத்தில் உள்ள கணினி பழுதானதால் தபால் அனுப்ப முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். தாராபுரம் புதுக்காவல் நிலைய வீதியில் உள்ள தாராபுரம் தலைமை தபால் அலுவல கத்தில் வியாழனன்று கணினி பழுது ஏற்பட் டது. இதன் காரணமாக காலை 11 மணி முதல் விரைவு தபால் மற்றும் பதிவுத் தபால் அனுப்பு வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் தலைமை அஞ்சலக அலுவலகத்திற்கு வந்த பொது மக்கள் தபால்களை அனுப்ப முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகினர். தலைமை தபால் நிலையத்தில் உள்ள கணினிகளை முறையாக பராமரிக்காததே இதற்கு கார ணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ள னர்.