districts

அடுக்குமாடிக் குடியிருப்பு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

அவிநாசி, ஜூலை 25 - பொங்கலூர் ஊராட்சி தாசராபாளையம் கிராமத்தில் வீட்டுமனை பட்டாக் கோரி விண்ணப்பித்திருந்த இடத்தில் அடுக்கு மாடிக் குடியிருப்பு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவிநாசி ஒன்றியம், பொங்கலூர் ஊராட்சிக்குட்பட்ட தாசராபாளையம் பகு தியில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடத் தில் அப்பகுதியில் வசிக்கும் நிலமற்ற, வீடு இல்லாத குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி 10 ஆண்டுக ளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.

இச்சூழலில், அரசுக்குச் சொந்த மான 13 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடிக் குடி யிருப்பு வருவதாக அறிந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியர், முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், தாசாராபாளையம் பகுதியில் உள்ள 13 ஏக்கர் நிலம் பல ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மூலம் அரசுக்கு தானமாக வழங்கப் பட்டது.

இந்த இடத்தில் பொங்கலூர் ஊராட்சியின் முக்கியத் தேவையான அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலை யம், கால்நடை மருத்துவனை உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். மேலும், இப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோருக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்யலாம் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.

 ஆனால், இதற்கு மாறாக தற்போது ஆயி ரத்திற்கும் அதிகமான குடியிருப்பு அமைப் பதற்காக குடிசை மாற்று வாரியம் நடவ டிக்கை எடுத்துள்ளனார்.

உள்ளூரில் வீடின் றித் தவிக்கும் ஏழை மக்களுக்கு இந்த இடத்தை பிரித்து நிச்சயமாக வீட்டுமனைப் பட்டாவாக வழங்கப்படும் என எதிர்பார்த் திருந்த நிலையில் இந்நிகழ்வு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அடுக்குமாடிக் குடியிருப்பு அமைக்கும் முடிவை ரத்து செய்து, மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வாக வழங்க வேண்டும். அல்லது அடுக்கு மாடிக் குடியிருப்பு அமைக்கப்பட்டால் உள் ளூர்வாழ் மக்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்க வேண்டும் என தெரிவித்தனர்.