மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் உதகை, டிச.3- நீலகிரி மருத்துவக் கல்லூரிக்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் தனியார் நிறு வனங்களுக்கு எந்தவித காரணமும் குறிப்பிடாமல், தொடர்ச்சியாக இ-மெயில்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பள்ளி குழந்தை கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகி றது. இந்நிலையில், செவ்வாயன்று நீலகிரி மாவட்டம், உதகை யில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த இ-மெயிலால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வா கத்தினர் இதுகுறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் உதகை மேற்கு காவல் ஆய்வாளர் சந்திர சீலன் தலைமையிலான போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் மருத்துவக் கல்லூரிக்கு சென்று தீவிர சோதனை செய்தனர். கல்லூரி வளாகம் மற்றும் பாதை கழிப்பறைகள் உள்பட பல்வேறு இடங்களில் முழுவதும் ஆய்வு செய்து வாகனங்களையும் சோதனை செய்து விசா ரணை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே வழக் கம் போல் இதுவும் புரளி என போலீசாருக்கு தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தரராஜன் தலைமையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமரா
தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமரா கோவை, டிச.3- அனைத்து தனியார் பேருந்துகளிலும் மூன்று நாட்களுக் குள் சிசிடிவி கேமரா பொருத்த காவல் ஆணையாளர் அறிவு றுத்தி உள்ளார். கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பது குறித்து திங்களன்று இரவு ஆய்வு மேற்கொண்டார். இதில், கோவை மாநகரில் இயங்கும் 149 தனியார் டவுன் பேருந்துகளில் 129 இல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதும் வெளி யூர் செல்லும் 107 தனியார் பேருந்துகளில் 50 இல் சிசிடிவி கள் நிறுவப்பட்டு உள்ளதும் ஆய்வில் தெரியவந்து உள்ளது. ஒவ்வொரு பேருந்திலும் 5 முதல் ஏழு வரையிலான சிசி டிவி கேமராக்கள் நிறுவப்பட்டு உள்ளன. கோவை மாநகர காவல் ஆணையர் சிசிடிவி நிறுவப்படாத அனைத்து தனியார் பேருந்துகளிலும் இன்னும் மூன்று தினங்களுக்குள் சிசி டிவி கேமராக்கள் பொருத்துமாறு அறிவுறுத்தினார்.
மதுக்கடையை மூடக்கோரி மனு
மதுக்கடையை மூடக்கோரி மனு தருமபுரி, டிச.3- பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபானக் கடையை மூட வேண்டும், என வலியுறுத்தி ஆட்சியரிம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், திண்டல் ஊராட்சிக்குட்பட்ட குட்டூர் கிராமத்தில் புதியதாக மது பானக்கடை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எதிர்ப்பை யும் மீறி திறக்கப்பட்ட இந்த கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், மாணவிகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இந்த கடையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி பொது மக்கள் பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்த னர். இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபானக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி திங்களன்று தரு மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
குடிநீர் வசதியின்றி பயணிகள் அவதி
கோபி, டிச.3- கோபி பேருந்து நிலையத்தில் குடிநீர் வச தியின்றி பயணிகள் அவதிப்படுவதால், இடிக் கப்பட்ட குடிநீர் தொட்டிக்கு மாற்றாக புதிய குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என பய ணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி பேருந்து நிலை யத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் செல்வதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக் கான பயணிகள் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக ளுக்காக அந்தியூர், பேருந்து நிற்குமிடத்தி லும் பேருந்து நிலைய முன்பகுதியில் வங்கி சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து பயன்பாட் டில் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு அந்தி யூர் பேருந்துகள் நிற்கும் இடத்தில் எவ்வித காரணமுமின்றி குடிநீர்தொட்டி இடித்து அகற் றப்பட்டது. மேலும், பேருந்து நிலையத்தின் உள்ளே பாரத ஸ்டேட் வங்கி சார்பில் அமைக் கப்பட்ட குடிநீர்தொட்டி பயன்பாட்டில் இல்லை. இதனால், பயணிகள் குடிநீர் தேவைக் காக அல்லல்படுகின்றனர். பேருந்து நிலை யத்தில் உள்ளே மேற்குப்பகுதியில் சுத்திகரிக் கப்பட்ட குடிநீர்தொட்டி பயன்பாட்டில் இருந் தும், யாருக்கும் தெரியாமல் மறைவாக உள்ளதால் பயணிகளுக்கு இங்கு குடிநீர் உள்ளதே தெரிவதில்லை. இதனால், வெளி யூர் செல்லும் பயணிகளும் வெளியூரி லிருந்து பேருந்து நிலையத்திற்கு வரும் பய ணிகளும் குடிநீர் கிடைக்காமல் அவதிபடு கின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் இடித்து அகற் றப்பட்ட குடிநீர் தொட்டிக்கு மாற்றாக புதிய குடிநீர்தொட்டி அமைக்கவும் பேருந்து நிலை யத்திற்கு வரும் பயணிகளுக்கு சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் கிடைத்திடும் வகையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து பயணி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டணத்தை பறித்துக்கொண்டு பயிற்சி அளிக்காத நிறுவனம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
நாமக்கல், டிச. 3- கணினி கற்றுத்தருவதாக மாண வரிடம் பயிற்சி கட்டணத்தை பெற்றுக் கொண்டு, பயிற்சியை வழங்காத தனி யார் பயிற்சி நிறுவனத்தின் சேவை குறைபாட்டை உறுதி செய்த நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மாணவருக்கு இழப் பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள புதூர் மலையாம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தினேஷ்(24). கடந்த 2023 ஜூன் மாதத் தில் சென்னையில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில் குறுகிய கால கம்ப்யூட்டர் படிப்புக்கு ரூ 26,000/- செலுத்தி உள்ளார். பயிற்சி நிறுவனத் தில் இரண்டு வாரங்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெற்றுள்ளன. அதற்கு பின்னர் வகுப்புகளை பயிற்சி நிறுவனம் நடத்தவில்லை. இது குறித்து மாணவர் பயிற்சி நிறு வனத்தில் கேட்டபோது ஏற்கனவே வேலையில் இருந்த ஆசிரியர் வேறு வேலைக்கு சென்று விட்டதால் பயிற்சியை நடத்த இயலவில்லை என்றும் வேறு பயிற்சியாளர் நிய மிக்கும் வரை காத்திருக்குமாறு தெரி வித்துள்ளனர். பல வாரங்கள் கடந்தும் பயிற்சி நிறுவனம் மீண்டும் வகுப்புகளை தொடங்கவில்லை. இதனால் பாதிக் கப்பட்ட மாணவர் தினேஷ் மீண்டும் வேறொரு நிறுவனத்தில் பணம் செலுத்தி பயிற்சியில் சேர்ந்து உள் ளார். வகுப்புகளை நடத்ததால் கல்வி கட்டணத்தை திரும்பத் தருமாறு மாணவர் கேட்டும் பயிற்சி நிறுவனம் பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் கடந்த 2024 மே மாதத் தில் தனியார் பயிற்சி நிறுவனத்தின் மீது வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை முடிவடைந்த நிலை யில் (03-12-2024) அன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர்கள் ஆர். ரமோலா, என் லட்சுமணன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினார். இத் தீர்ப்பில், பயிற்சி நிறுவனம் சேவை குறைபாடு புரிந்துள்ளதால் மாணவர் செலுத்திய ரூபாய் 26 ஆயிரமும் மாணவருக்கு ஏற்பட்ட சிரமங்க ளுக்கு இழப்பீடாக ரூபாய் 12 ஆயிர மும் ஒரு மாதத்துக்குள் மாணவ ருக்கு வழங்க பயிற்சி நிறுவனத் திற்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டனர்.
தூய்மைப் பணியாளர்களுக்கு ரெயின் கோட் வழங்கல்
சேலம், டிச.3- மழை நேரத்திலும் தூய்மைப் பணி மேற்கொள்ளும், தூய் மைப் பணியாளர்களுக்கு ரெயின் கோட் வழங்கிய மாந கராட்சி கவுன்சிலரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வரு கின்றனர். சேலம் மாநகரம், அம்மாபேட்டை மண்டலம், 9 ஆவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் தெய்வலிங்கம். இவர் தமது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும், அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை வித்தியாச மான முறையில் செய்து வருவது வழக்கம். கடந்த வாரத் தில் சாலையில் தீப்பிடித்து எரிந்த காரை தனது நண்பர்க ளுடன் சென்று தீயை அணைத்து அதிலிருந்த கர்ப்பிணி உள்ளிட்ட அனைவரையும் காப்பாற்றி, அனைவரின் நன் மதிப்பையும் பெற்றார். சேலம் மாவட்டத்தில் தற்போது கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சாக்கடை கால்வாய்கள் மற்றும் சாலைகளில் இருந்து பெரிய அளவில் குப்பைகள் தேக்கமடைந்தது. மழையின் காரண மாக தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றுவ தில் சிரமம் ஏற்படுகிறதென கவுன்சிலர் தெய்வலிங்கத் திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தனது வார்டுக்குட்பட்ட அனைத்து தூய்மைப் பணியாளர் களுக்கும் தனது சொந்த செலவில் ரெயின் கோட் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். இதனைப் பெற்றுக் கொண்ட தூய்மைப் பணியாளர்கள் தங்களின் நிலையை அறிந்து உதவிய கவுன்சிலர் தெய்வலிங்கத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
கடல் போல் மாறிய எருக்கன் குளம்
கோவை, டிச.3- அன்னூர் அருகே உள்ள 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட எருக்கன் குளம் வடகிழக்கு பருவமழை காரணமாக கடல் போல் மாறி உள்ளது. மேலும், குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி ஊராட்சியில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட எருக்கன் குளம் உள்ளது. கஞ்சப்பள்ளி மற் றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவ சாய நிலங்களின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள இந்த குளத்திற்கு ஏற்கனவே அவிநாசி அத்திக் கடவு நிலத்தடி நீர் செரிவூட்டு திட்டம் மூலம் இணைப்பு வழங்கி உள்ள நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை காரணமாக அந்த குளம் முழுவதுமாக நிரம்பி உள்ளது. இந்நிலையில், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திங்களன்று இரவு விடிய விடிய வடகிழக்கு பருவமழை கனமழையாக பெய்த நிலையில் அதன் காரணமாக குளம் மேலும் நிரம்பி கடல் போல தண்ணீர் காட்சியளித்து வரும் நிலை யில் குளத்தில் இருந்து தண்ணீர் நிரம்பி அதன் உபரி நீர் வெளியேறி அடுத்த குளத்திற்கு வெளியேறி வரு கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக அன்னூர் கஞ்சப்பள்ளி ஊராட்சி பகுதிகளின் முக்கிய நீரா தாரமாக உள்ள இந்த குளம் நிரம்பியுள்ளது. அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.