மின் வாரியத்தின் முரண்பாடான நடவடிக்கை: போசியா கண்டனம்
கோவை, ஜன.24- தமிழக அரசின் மின் கட்டண குறைப்பு உத்தரவு நடைமுறைப் படுத்தப்படாமல் சிறு தொழில் முனை வோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளதாக போசியா கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 12 கிலோவாட் வரை மின்சாரம் பயன்படுத்தும் தொழில் முனைவோ ருக்கு 3B கட்டணத்தில் இருந்து 3A1 கட்டணத்திற்கு மாற்றம் செய்ய வேண்டிய அரசாணையை மின்சார வாரியம் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது தொழில் முனைவோரை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள் ளது. கடந்த 2023 செப்டம்பர் மாதம் தமிழக அரசு, 12 கிலோவாட் வரை மின்சாரம் பயன்படுத்தும் மின்நுகர் வோர்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் 3B கட்டணத் தில் இருந்து 3A1 கட்டணத்திற்கு மாற் றம் செய்ய உத்தரவிட்டது. இதற்காக தேவையான நிதி ஒதுக்கீட்டையும் அரசு செய்திருந்தது. ஆனால், மின்சார வாரியம் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் தாமதப் படுத்தி வருகிறது. இதுகுறித்து அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளதாவது, சிறு தொழில் முனை வோர் ஏற்கனவே கொரோனா பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில், மின் கட்டண உயர்வு அவர்க ளின் தொழிலை பெரிதும் பாதித்துள் ளது. அரசின் உத்தரவை மின்சார வாரியம் நடைமுறைப்படுத்த தவறி யதால், தொழில் முனைவோர் கடும் பொருளாதார நெருக்கடியை சந் தித்து வருகின்றனர். மேலும், மின்சார வாரியம் தானியங்கி முறையில் மீட் டர்களை மாற்றி அபராதம் விதிக் கிறது. ஆனால் கட்டண மாற்றத்தைத் தானே செய்ய முடியாது எனக் கூறு வதும் முரண்பாடாக உள்ளது. இது குறித்து, போசியா கூட்டமைப்பு, தமி ழக முதலமைச்சர் மற்றும் மின்வாரிய அமைச்சரிடம் உடனடி தலையீடு கோரியுள்ளது. அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்தி, சிறு தொழில் முனைவோரை இந்த நெருக்கடி யிலிருந்து மீட்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறக்கட்டளை நடத்தி பல கோடி ரூபாய் ஊழல் பாஜக பெண் நிர்வாகி உள்ளிட்டோர் கைது
சேலம், ஜன.24- சேலம் மாநகரத்தில் அறக்கட்டளை நடத்தி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் ஊழல் செய்த பாஜக பெண் நிர்வாகி உள் ளிட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். சேலம் மாநகரம், அம்மாபேட்டை அருகே உள்ள காமராஜர் நகர் காலனி, பி.எஸ்.கே. சிவகாமி திருமண மண்டபத்தில் இயங்கி வரும் அன்னை தெரேசா மனிதநேய அறக் கட்டளையைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களி டமிருந்து பணம் வசூல் செய்து வருவது சம் பந்தமாக காவல் உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உளவு அமைப்புகள், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அரசுக்கும், காவல் உயர் அதிகாரிகளுக்கும் அறிக்கை அளித்தனர். இந்த அறிக்கையின் பேரில் வியாழனன்று மாலை சேலம் பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் வெங்க டேசன், ஆய்வாளர் சித்ராதேவி ஆகியோர் தலைமையில் விசாரிக்க சென்றனர். அப் போது அங்கிருந்தவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததோடு, காவல் துறையி னர் மீது தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேலம் மாநகர காவல் உயர் அதி காரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் காவலர்கள் குவிக்கப்பட்டு, அறக்கட் டளை என்னும் பெயரில் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலையும், தாக்குதல் நடத்தியவர் களையும் குண்டுகட்டாக தூக்கி வந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அறக் கட்டளையை நடத்தும் விஜயா பானு மீது பல மோசடி வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விஜயாபானு (58), ஜெயப்பிரதா (57) மற்றும் பாஸ்கர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திய 12 பேரையும் கைது செய்தனர். கைதான நிறுவனத் தலைவர் விஜயாபானு பாஜக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட் டியிட்டு தோல்வியடைந்துள்ளார். மேலும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ள தால் அவர் மீது சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் வழக்கு பதிவாகியுள்ளது. இத னையடுத்து, மோசடியில் ஈடுபட்டோரை பிப். 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உட்ப டுத்த கோவை டேன் பிட் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தாராபுரத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
தாராபுரத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல் திருப்பூர், ஜன.24 - தாராபுரம் நகரில் தெரு நாய் தொல்லைகளை கட்டுப்ப டுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் என்.கனகராஜ், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தாராபுரம் நகர கிளைச் செயலா ளர் கி. மேகவர்ணன் ஆகியோர் தாராபுரம் நகராட்சி ஆணைய ரிடம் வெள்ளியன்று மனு அளித்தனர். இதில் தெரு நாய்களால் குழந்தைகள், சிறுவர்கள் அச்சு றுத்தப்படுவதும், துரத்திக் கடிக்கும் நிகழ்வுகளும் வேறு பல பகுதிகளில் நடைபெறுவதைப் போலவே தாராபுரம் நகரி லும் நடைபெறுகிறது. சண்டையிட்டுக் கொள்ளும் நாய்கள் வீதிகளில், சாலைகளில் பாய்ந்து செல்வதால், வாகன ஓட்டி கள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிகழ்வுக ளும் நடைபெற்று வருகின்றன. எனவே தெரு நாய்களை கட் டுப்படுத்த அவசர அவசிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உடுமலையுடன் கணக்கம்பாளையம் ஊராட்சியை இணைக்க கோரிக்கை
உடுமலை, ஜன.24 – உடுமலைப்பேட்டை நகராட்சியுடன் கணக்கம்பாளையம் ஊராட்சியை இணைக்க வேண்டும், இது தொடர்பாக வரும் 26ஆம் தேதி கிராமசபையில் தீர்மானம் நிறை வேற்றவும் இங்குள்ள அனைத்து கட்சி மற் றும் குடியிருப்போர் நல சங்கத்தின் கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கணக்கம்பாளையம் ஊராட்சி அனைத்து கட்சி மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தின் கூட்டம் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை எஸ். வி.புரம் ஜெயபிரகாஷ் இல்லத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் இந்த ஊராட்சி பகு தியில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினர், குடியிருப்போர் நலச்சங்கங்கள், சமூக நல ஆர்வலர்கள், பொது மக்கள் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில் உடுமலை நகராட்சியின் எல்லைப் பகுதியில் இருக்கும் கணக்கம்பா ளையம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க வேண்டும். மேலும் வரும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறவுள்ள கிராமசபை கூட் டத்தில் நகராட்சியுடன் இணைக்க விண்ணப் பங்கள் கொடுத்து, கிராமசபைத் தீர்மானமாக நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் ஒருங்கிணைப்புக் குழுவின் மூலம் இந்த இணைப்பிற்கு முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர், தொடர் புடைய அதிகாரிகளுக்கு விண்ணப்பம் கொடுப்பது, சட்டமன்ற உறுப்பினர், நாடாளு மன்ற உறுப்பினர் ஆகியோருக்கு விண்ணப் பம் அளிப்பது, கோரிக்கை நிறைவேறும் வரை அனைத்து வழிகளிலும் போராடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கணக்கம்பாளையம் ஊராட்சியில் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் மாதம் இரண்டு முறை தான் கிடைக்கிறது, குப்பை கள் அனைத்தும் தெருவில் உள்ளதால் தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் உடுமலை நகராட்சியின் எல்லை பகுதி மற்றும் சில நகராட்சி குடியிருப்புகள் கணக்கம்பாளயம் ஊராட்சிப்பகுதியில் அதி கமாக உள்ளன. எனவே அடிப்படை வசதிகள் கிடைக்க நகராட்சியுடன் இணைப்பதே சரி யாக இருக்கும் என்றனர்.
பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் அதிகாரிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் அதிகாரிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தருமபுரி, ஜன.24- பென்னாகரம் அருகே பட்டியலின குடியிருப்பு பகுதி யின் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பனைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர் காலனி மற்றும் பனை குளம் பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டம் ரூ.6.8 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொட்லாம் பட்டி ஏரி அருகில் ஆழ்துளை கிணறு அமைத்து பனைகுளம், ஆதிதிராவிடர் காலனி வரை 1100 மீட்டர் தூரம் குழாய் பதித்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீரேற்றி குடிநீர் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் பென்னாகரம் வட்டத்தில் நடைபெற்ற ‘உங்கள் ஊரில் உங்களைத் தேடி’ என்ற முகாமில் கலந்து கொண்ட தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மேற்கண்ட குடிநீர் திட்ட பணிகளை பார்வையிட்டு பணி களை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். இந்நிலையில், கடந்த வாரம் குடிநீர் திட்டப்பணிகள் நடை பெறும் பகுதி அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்றுக்கூறி பணிகளை நிறுத்துமாறு, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவல ருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறி பணி நிறுத்தப்பட்டு விட்டது. பனைகுளம் கிராமத்திலிருந்து வத்திமரதஅள்ளி கிரா மத்துக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டு, அரசு நகரப்பேருந்து இயக்கப்பட்டு வருகி றது. அதே தார்சாலையை ஒட்டியபடி மேற்குப் பகுதியில் ஒகே னக்கல் குடிநீர்த் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. அதே தார்சாலையில் கிழக்குப்பகுதியில் சாலை ஓரமாக தற்போது குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அறநி லையத்துறை நிலம் என்று சொல்லி தடை செய்வதால் அப் பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏற்படும் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். குடிநீர் திட்டப்பணிகளை தடைசெய்யும் அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல் தவறானது. மேற்கண்ட அதிகாரி களின் தடையை நீக்கி கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட் டத்தை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். இல்லையென்றால் அப்பகுதி மக்களை திரட்டி போராட் டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப் பாரப்பட்டி பகுதிச் செயலாளர் சக்திவேல் தெரிவித்தார்.
கடத்தி செல்லப்பட்ட பெண் மீட்பு
சேலம், ஜன.24- எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்து கணவர் வீட்டிலிருந்த பெண் கத்தி முனையில் கடத்தப்பட்ட நிலையில், அவரை காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர். சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், செட்டிமாங்குறிச்சி கிராமம், சின்னதாண்ட வனூரைச் சேர்ந்தவர் தனுஷ்கண்டன் (25). இவர் தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த சின்னம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரோஷினி என்பவரை காதலித்து, கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டு, எடப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இரு வரும் திருமண வயதை எட்டியிருந்ததால் போலீசார் பெற்றோரை சமாதானம் செய்து கணவர் தனுஷ்கண்டனுடன் ரோஷினியை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வியாழ னன்று மாலை தனுஷ்கண்டன் வீட்டிற்கு காரில் வந்து இறங்கிய பெண் வீட்டார், அரி வாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்க ளுடன் அங்கிருந்த ரோஷினியை வலுக் கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதுகுறித்து தனுஷ்கண்டன் அளித்த புகாரின் பேரில், எடப்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். மேலும், கடத்தப்பட்ட ரோஷினி, கர்ப்பமாக இருப்பதாக உறவினர்கள் தெரி வித்தனர். இந்நிலையில், கடத்தலுக்கு பயன்படுத் தப்பட்ட காரின் எண்ணை வைத்து உரிமையா ளரை கண்டுபிடித்த போலீசார், கடத்தப்பட்ட பெண் ரோஷினியை பத்திரமாக மீட்டு கணவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும், ஈரோட்டில் பதுங்கியிருந்த கடத்தலில் தொடர்புடைய ரோஷினியின் தந்தை குமார செல்வம், தாய் சித்ரா, பெரியப்பா லட்சும ணன், சகோதரி சௌமியா, தந்தையின் நண் பர் கருப்பண்ணன், வெங்கடாசலம் ஆகிய ஆறு பேரையும் வெள்ளியன்று நள்ளிரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதன் பின் அவர்களை எடப்பாடி காவல் நிலையத் திற்கு அழைத்து வந்து போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதை மாத்திரை விற்பனை: 9 பேர் கைது
சேலம், ஜன.24- போதை மாத்திரைகளை விற்பனை செய்த 9 வாலிபர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 7900 மாத் திரை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். சேலம் மாநகரில் பல்வேறு பகுதிகளில் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்தி ரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படை யில் வீராணம் பகுதியில் சுற்றித்திரிந்த வாலி பரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந் தது தெரிய வந்தது. மேலும், அவர் யாரிடமி ருந்து வாங்கினார்? என்பது குறித்த விசார ணையில், சித்தனுர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் பிடிபட்டார். அவரிடம் நடத் தப்பட்ட விசாரனையை அடுத்து, திருவா கவுண்டனூர் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (எ) வெங்கடேஷ் (31), ராம்குமார் (34), மனோஜ் பிரபு (30), அருண் பிரபு (28), அழகாபுரம் பகுதி யைச் சேர்ந்த டேனியல் (20), சூரமங்கலம் பகு தியைச் சேர்ந்த தினேஷ்குமார் (31), ஜாகி ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கலையர சன் (33), சஞ்சய் குமார் (20), கலர் காடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் (30) ஆகி யோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 7900 மாத்திரைகள், 38 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காவல் உதவி ஆணையர் ஹரிசங்கரி கூறுகையில், கல்லூரி இளைஞர் களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்கப்படுகிறது. குறிப்பாக, ‘இந்தியா மார்ட்’ என்கின்ற செயலியில் குறைந்த விலைக்கு மாத்திரைகளை அதிகளவு பெற்று விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. யாரெல் லாம் உடந்தை என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது, என்றார்.
அநாகரீக பேச்சு: சீமானுக்கு ஒரு வரியில் கண்டனம்
கோவை, ஜன.24- கோவை விமான நிலையத்தில் பெண் பத்திரிக்கையாளர் கேள்விக்கு, அநாகரீக வார்த்தையுடன் பதிலளித்த சீமானுக்கு கோயமுத்தூர் பத்திரிக்கை யாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள் ளது. கோவை விமான நிலையத்தில் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தலைமுறை ஊடகத்திற்கு பேட்டியளித்த சீமான், பெண் பத்திரி கையாளரின் கேள்வி ஒன்றிற்கு அநாக ரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி யது முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் பத்திரிகையாளரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூட சீமானுக்கு தெரியாதா? என்று சமூக வலைதளங்களில் மூத்த பத்திரிகையா ளர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனி டையே சீமானின் இந்த முறையற்ற பேச் சுக்கு கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “பொதுவாழ்க் கைக்கு வந்து ஆண்டுகள் பல கழிந்தும், பொதுவெளியில் பெண்கள் மத்தியில் நாகரீகமாக பேசத் தெரியாத ச்ச்ச்சீமானே” என ஒரே வரியில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல சென்னை பிரஸ் கிளப் உள்ளிட்ட பத்திரிக்கையாளர் சங் கங்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. பெரி யார் குறித்து சீமான் தொடர்ந்து சர்ச் சைக்குரிய கருத்துகளைப் பேசி வந்த சீமான் பொது வெளியில் பேட்டியளிக் கும் போது தன்னிலை மறந்து அநாகரீக மாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.