கடன் வழங்க தாட்கோ இலக்கு
ஈரோடு, அக்.13- 50 பேருக்கு கடன் வழங்க தாட்கோ இலக்கு நிர்ணயித் துள்ளது. இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோ பால் சுன்கரா வெளியிட் டுள்ள அறிக்கையில், 18 முதல் 55 வயதுள்ள பட்டிய லின, பழங்குடி மக்களுக்கு தாட்கோ மூலம் மானியத்து டன் கடன் வழங்கப்படுகிறது. தொழிலுக்கான திட்ட மதிப் பீட்டில் 35 விழுக்காடு அல் லது ரூ.3.50 லட்சம் மானிய மாகும். கடந்த ஆண்டில் 38 பயனாளிகளுக்கு ரூ.65.31 லட்சம் மானியம் வழங்கப் பட்டது. நடப்பாண்டில் 50 பயனாளிகளுக்கு மானியத் துடன் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது.
காப்பக மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி தமிழக அரசு அரசாணை
சென்னை,அக்.13- தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் உள்ள அரசு சேவை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்ப கங்களில் உள்ள மாணவி களுக்கு தற்காப்பு பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப் பட்டது. இதை செயல்படுத்த ரூ.1.12 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்படி, மொத்தம் 1,400 மாணவிகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி வழங் கப்படவுள்ளது. மேலும் பயிற் றுநர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமை யில் மாவட்ட சமூக நல அலுவ லர், மாவட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகி யோர் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் துறை பெயர் மாற்றம் முதல்வர் பரிசீலிப்பார்’
சிவகங்கை,அக்.13- சிவகங்கையில் ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், “ஆதிதிரா விடர் நலத்துறை பெயரை மாற்றுவது குறித்து முதல்வர் தான் பரிசீலிப்பார். ஆதிதிராவி டர்களுக்கான நிதி முறையாக செலவழிக்காமல் திருப்பி அனுப்புவதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல். ஆதிதிராவிடர், பழங்குடியி னருக்கு நலத்திட்டங்களை விரைவில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகி றோம்” என்று தெரிவித்தார்.
கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் இந்து முன்னணி நிர்வாகி கைது
பொள்ளாச்சி, அக்.13- பொள்ளாச்சி அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர் களை தாக்கிய வழக்கில், இந்து முன்னணி நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி - உடுமலை சாலையில் சரஸ்வதி தியாகராஜா என்ற தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பொள்ளாச்சியை சுற்றியுள்ள பகுதி களைச் சேர்ந்தவர்களும், கேரளத்தைச் சேர்ந்தவர்களும் படித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கல் லூரி மாணவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், அப்பகுதியிலுள்ள குயின் பேக்கரியில் மாணவர் கள் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, பொள்ளாச்சி அருகே உள்ள மக்கினாம்பட்டியை சேர்ந்த முத்து என்பவர், தனது அடியாட்களுடன் வந்து மாணவர்களை திடீரென தாக்கி யுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுசம்பந்தமாக மாவட்ட காவல் கண் காணிப்பாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி, கோமங் கலம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து, தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகி யான முத்து சுப்பிரமணியம் மற்றும் கல்லூரி மாணவர்கள் நவீன், யுவராஜ், பிரவீன், சக்தி, கௌதம் ஆகியோர் மீது வழக் குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அனைவரும் பொள்ளாச்சி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குன்னூர் மலைப்பாதையில் மண்சரிவு
உதகை, அக்.13- குன்னூரில் பெய்த தொடர் மழையால், மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாட்க ளாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சனியன்று காலையில் இருந்து ஞாயிறு வரை அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்தது. இந்த மழைக்கு குன் னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே திடீர் மண் சரிவு ஏற்பட் டது. அத்துடன் சாலையில் மரங்களும் முறிந்து விழுந்தன. இதுகுறித்து தகவலறிந்து அப் பகுதிக்கு வந்த குன்னூர் துணை காவல் கண் காணிப்பாளர் வீரபாண்டி, ஆய்வாளர் சதீஷ் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவல் துறை யினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஜேசிபி இயந்திர உதவி யுடன் மண் மற்றும் மரங்களை அகற்றினர். இதேபோல், ஞாயிறன்று காலை குன்னூர் அருகே உள்ள சிம்ஸ் பூங்கா, அடார் செல் லும் சாலையில் ராட்சத மரம் மின் கம்பி மீது விழுந்ததால், மின்விநியோகம் துண்டிக்கப் பட்டது. உதகையிலும் நாள் முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மழை யையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பய ணிகள் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்த னர்.
பொள்ளாச்சியில் போலீசார் திடீர் சோதனை
கோவை, அக்.13- பொள்ளாச்சியில் சமூக விரோத செயல் கள் நடைபெறாமல் இருக்க, போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பான் மசாலா, குட்கா, போதை வஸ்துக்கள், லாட்டரி சீட்டு கள் மற்றும் சமூக விரோத செயல்கள் நடை பெறாமல் இருக்க கோவை மாவட்ட கண்கா ணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் சனி யன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதி யில் உள்ள கடைகளில் காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில், புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் காவலர் அறையில் கண்காணிப்பு கேமராக்கள் சரி யாக கண்காணிக்கப்படுகிறதா? மற்றும் காவ லர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வருகிறார் களா? என கோப்புகளை காவல் கண்காணிப் பாளர் ஆய்வு செய்தார். பழைய பேருந்து நிலையம் உள்ள பகுதி கடையில் போலீ சார் குட்கா பான் மசாலா உள்ளதா? என சோதனை செய்தார். இதன்பின் நகராட்சி பகுதியில் வாகனத் தணிக்கை செய்யப் பட்டது.