districts

img

தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தித் தரக்கோரி மறியல்

தருமபுரி, ஜன.20- பென்னாகரம் அருகே தொன் னகுட்டஅள்ளி பகுதியில் தொலைத் தொடர்பு வசதி ஏற்படுத்தித்தர வலியுறுத்தி பொதுமக்கள் திங்க ளன்று சாலை மறியலில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்டம், ஏரியூர்  அருகே உள்ளது தொன்னகுட்ட அள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக் குட்பட்ட தாளப்பள்ளம், புதுக்காடு, ஊர் நத்தம், சீலநாயக்கனூர், மணி யகாரன் கொட்டாய், பாய்பள்ளம், மேட்டூரான் கொட்டாய் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்க ளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இப்பகுதிகளானது அடர்ந்த மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால்,  தொலைத்தொடர்பு வசதி முற்றி லும் ஏற்படுத்தப்பட முடியாமல் இருந்துள்ளது. கிராமப் பகுதிக ளுக்கு தொலைத்தொடர்பு வசதி  இல்லாததால் அவசர தேவைகள்,  அரசின் சேவைகள் பெற விண்ணப் பித்தல் உள்ளிட்ட இதர தேவை களுக்காக சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏரியூர் பகு திக்கு செல்ல வேண்டியுள்ளது. அவசரம் என்றால் அருகிலுள்ள மலை குன்றுகளின் மீது ஆபத்தான முறையில் நின்று தொலைத்தொ டர்பு கிடைக்கும் பட்சத்தில், அவ சர தேவைக்கான அழைப்புகளை பெற்று வருகின்றனர்.  எனவே, தொன்னகுட்டஅள்ளி  பகுதியில் தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என வலி யுறுத்தி மாவட்ட ஆட்சியர், நாடாளு மன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப் பினர் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. இத னால் ஆவேசமடைந்த 10க்கும் மேற் பட்ட கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திங்களன்று, முதுகம்பட்டி - ஏரி யூர் செல்லும் சாலையில், ஊர் நத் தம் என்னும் இடத்தில் அமர்ந்து மறி யலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தக வலறிந்த ஏரியூர் காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சம் பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இப் போராட்டத்தால் அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.