சேலம், ஜன.20- எருமாபாளையம் ஊராட்சியை சேலம் மாநகராட்சி யுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும், என வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், எருமாபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செங்கோடன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் செங்கோடன் கூறுகையில், எருமா பாளையம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கூலி வேலை உள்ளிட்ட அன்றாட வேலைகளை செய்து வாழ்க் கையை நடத்தி வருகின்றனர். தற்போது எருமாபாளை யம் ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைப்ப தாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு நடந் தால் குப்பை, தண்ணீர், வீட்டு வரி உயரும். அன்றாட கூலி வேலை செய்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி வரும் 300க்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே, எருமாபாளையம் ஊராட்சியை மாநகராட்சி யுடன் இணைக்கக்கூடாது, என்றார்.