நாமக்கல், ஜன.20- ரெட்டிபட்டி ஊராட்சியை நாமக் கல் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் நகராட்சி, தற்போது தமிழக அரசால் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இத னால் மாநகராட்சியுடன் ரெட்டிபட்டி ஊராட்சியும் இணைக்கப்பட்டுள் ளது. குக்கிராமங்களான சாலப் பாளையம் மற்றும் சின்னப் பெருமாப்பட்டி, ரெட்டிபட்டி ஊராட்சிக்குட்பட்டதால் இந்த கிரா மங்களும் மாநகராட்சியுடன் சேர்க் கப்பட்டுள்ளது. சாலப்பாளையம் மற்றும் சின்னப்பெருமாப்பட்டியா னது, சுமார் 300 சிறு, குறு விவசாய குடும்பங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த வேலைகள் செய்யும் குடும் பங்களைக் கொண்டுள்ளதாகும். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் விவசாய நிலங்களானது அருகிலுள்ள பழையபாளையம் அக்ரஹாரத்தில் சுமார் 250 ஏக்கர் நன்செய் நிலமும், பெருமாபட்டி கீழ் முகாம் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நன்செய் புன்செய் நிலங்களும் உள்ளன. இக்கிராமங்களை மாந கராட்சியுடன் இணைக்கும் பட்சத் தில் சொத்து வரி மற்றும் இதர வரி கள் அதிகமாவதோடு, 100 நாள் வேலை அப்பகுதி மக்களுக்கு கிடைக்காமல் போக்கும். எனவே, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இந்த கிராமங்களை நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கக்கூ டாது என வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக் கப்பட்டது. சிபிஎம் ஆர்ப்பாட்டம் இதேபோன்று, குமாரபாளை யம் தாலுகா, குப்பாண்டபாளையம் ஊராட்சியில் உள்ள எட்டு வார்டு களை, குமாரபாளையம் நகராட்சி யுடன் இணைக்கும் தமிழக அரசின் உத்தேச முடிவை கைவிடக்கோரி, திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட் டத்திற்கு சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.ராஜா தலைமை வகித்தார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மு.மணிகண்டன், எம்.தனேந்திரன், எஸ்.தனசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.