districts

img

சிபிஎம் அகில இந்திய மாநாட்டு நிதி வழங்கல்

தருமபுரி, மார்ச் 23- மார்க்சிஸ்ட் கட்சியின் தருமபுரி  மாவட்டக்குழு சார்பில், அகில  இந்திய மாநாட்டு நிதி வழங்கப்பட் டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தருமபுரி மாவட்டக்குழு சார்பில்,  கட்சியின் அகில இந்திய 24 ஆவது மாநாட்டு நிதியாக ஏற்கனவே ரூ.10  லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில், ஞாயிறன்று மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாநாட்டு நிதியாக ரூ.2  லட்சம் மாநில செயற்குழு உறுப்பி னர் டி.ரவீந்திரனிடம் வழங்கப்பட் ்டது. இந்நிகழ்வில், கட்சியின் மாவட் டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.  ஓய்வூதியத்தை வழங்கிய தோழர் தருமபுரியைச் சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவர், மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரு டைய அம்மா சிவகாமி அம்மாள்  (98) தனது குடும்ப ஓய்வூதியத்தி லிருந்து, ரூ.5 ஆயிரத்தை கட்சி யின் அகில இந்திய மாநாட்டு நிதி யாக, மாநில செயற்குழு உறுப்பி னர் டி.ரவீந்திரனிடம் வழங்கினார். மாவட்டச் செயலாளர் இரா.சிசுபா லன், மாவட்டக்குழு உறுப்பினர் டி. எஸ்.ராமச்சந்திரன், என்.கந்தசாமி, நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு ஆகியோர் உடனிருந்தனர்.