districts

img

அவிநாசியில் புத்தகங்களோடு புத்தாண்டு

அவிநாசி, ஜன.1 அவிநாசியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தினர் ’’புத்தகங்களோடு புத்தாண்டு’’ நிகழ்வை செவ்வாயன்று கொண்டாடினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  அவிநாசி கிளை நடத்தும் புத்தகங்களோடு புத்தாண்டு கொண் டாட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த  நிகழ்வை ராஜேந்திரன் தலைமையேற்று நடத்தினார். இதில்  பாரதி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து ரகு, கார்த்திகே யன், கவிதை வாசிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து சின்ரா சுவின் திரைப்படப் பார்வை, ரங்கராஜன் பாடல்கள் நிகழ்வுகள்  நடைபெற்றன. காயத்ரி, பரமேஸ்வரி, சம்பத்குமார் ஆகி யோர் பசி கொண்ட இரவு சிறுகதை நூலினை அறிமுகம்  செய்தனர். அதேபோல சிவராசு, விதுலா, மதியுகன் உள்ளிட் டோர் அனலிக்கா கவிதை, நிகழ்வை சுவைக்கக்கூடும் உள் ளிட்ட நூல்களை அறிமுகம் செய்தனர். மேலும் கவிஞர் பார் வதி பாலசுப்பிரமணியத்திற்கு பாராட்டு விழா நடைபெற் றது. இந்த நிகழ்வில் வெள்ளியங்கிரி வாழ்த்துரை வழங்கி னார். லக்ஷனா, சுசிலா, நீரோடை மகேஷ், சதீஷ்குமார், நந்து  உள்ளிட்டோர் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.