நாமக்கல், செப்.17- பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, மிதி வண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் மரு.மா.மதிவேந்தன் பரிசும், சான்றி தழ்களும் வழங்கினார். நாமக்கல் மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதி வண்டி போட்டியினை 15.09.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் மாவட்ட ஆட்சியர் கொடிய சைத்து துவக்கி வைத்தார். இதில் 13,15,17 வயதிற்குள் உள்ள மாணவ - மாணவியர்களுக்கு தனித்தனியாக மிதிவண்டி போட்டிகள் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றி தழ்கள் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வெள்ளியன்று நடை பெற்றது. இதில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்கள் பெற்றவர்களுக்கு பரிசு ரூ.250 என மொத்தம் ரூ.70,500 பரிசுக்கான காசோலைகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மரு.மா.மதிவேந்தன் வழங்கினார். பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராம லிங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் க.கோகிலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.