districts

img

திருப்பூரில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1,985 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்

திருப்பூர், நவ.16- திருப்பூர் மாவட்டத்தில் பயிர்க டன், சுய உதவிக்கடன், தாட்கோ  கடன், நகைக்கடன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கடன்கள் உட்பட ரூ.1, 985 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.719.37 கோடி மதிப்பீட்டி லான கடன் தள்ளுபடி செய்யப்பட் டுள்ளது என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். 71 ஆவது அனைத்திந்திய கூட்டு றவு வார விழா பொங்கலூர் ஊராட்சி  ஒன்றியம், அலகுமலை ஸ்ரீ வேலன்  மஹாலில் நடைபெற்றது. இதில்,  கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சி  மற்றும் செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் கூறியிருப்பதா வது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  182 தொடக்க வேளாண்மை கூட்டுறவு  கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்க டன்கள் மற்றும் கால்நடை பராமரிப் புக்கடன்கள் போன்றவைகள் வழங் கப்பட்டு வருகிறது. 2024 - 2025 ஆண் டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம்  பயிர்க்கடன்கள் 23,634 விவசாயிக ளுக்கு ரூ.281.84 கோடியும், நகைக்  கடன்கள் 70,815 நபர்களுக்கு ரூ.763. 31 கோடியும், மத்திய காலக் கடன்கள்  871 நபர்களுக்கு ரூ.9.58 கோடிக்கும், 254 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.143.6 லட்சமும், டாப்செட்கோ கடன் 70 நபர்களுக்கு ரூ.1.22 கோடி யும், டாம்கோ கடன்களாக 21 நபர்க ளுக்கு ரூ.10.75 லட்சமும், 1,640 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.33.96 கோடியும், வீட்டுக் கடன் 233  நபர்களுக்கு ரூ.13.79 கோடி மற்றும்  சிறு வணிக கடன்கள் 573 நபர்களுக்கு  ரூ2.64 கோடி அளவிற்கு வழங்கப்பட் டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் மொத்தம் 1,04,100 நபர்களுக்கு ரூ.1232 கோடி அளவிற்கு கடன்கள்  வழங்கப்பட்டுள்ளது. மேலும், பயிர்  கடன் 46,903 பயனாளிகளுக்கு ரூ.529.90 கோடி மதிப்பீட்டிலும், நகைக்கடன் 32,531 பயனாளிக ளுக்கு ரூ.158.68 கோடி மதிப்பீட்டி லும், 1,638 சுய உதவிக்குழுக்களுக்கு  ரூ.30.79 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 97,192 பயனாளிகளுக்கு ரூ.719.37 கோடி மதிப்பீட்டிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் தலைமை யில் நடைபெற்ற இவ்விழாவில், மனி தவள மேலாண்மைத்துறை அமைச் சர் என்.கயல்விழி செல்வராஜ், கூட்டு றவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும்  துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து  கொண்டார்கள்.