திருப்பூர், நவ.16- புதிய பேருந்து நிலையம் முன்பு குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பேருந்து நிலையத்திற்கு தினசரி ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல் கின்றனர். மேலும், இப்பகுதியில், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், கடைகள் உள்ளன. ஈரோடு, கோபி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வந்து நின்று பயணிகளை ஏற்றி செல் லும். இந்நிலையில், இப்பகுதியில் குழாய் பதிப்பதற்காக சில மாதங்க ளுக்கு முன்பு சாலைகள் தோண்டப் பட்டு மூடப்பட்டது. ஆனால் இன்னும் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இத னால், மழை காலங்களில் இப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காணப் படுகிறது. மேலும், சமீபத்தில் தான் பல கோடி ரூபாய் செலவு செய்து இப் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இதுகுறித்து பயணிகள் சிலர் தெரி விக்கையில், ஈரோடு, கோபி உட்பட நகர பேருந்துகள் புதிய பேருந்து நிலை யத்திற்குள் செல்லாது. பேருந்து நிலை யம் முன்பு உள்ள பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு நின்று தான் பயணிகளை ஏற்றி செல்லும். இச்சூழலில், மழை காலங்களில் இப்பகுதி முழுவதும் சேறும் சகதியாக மாறி விடுகிறது. ஏற்க னவே வெயில் காலங்களில் நிழற் குடை இல்லாததால், வெயில் நிற்க வேண்டியுள்ளது. இப்படி இருக்கை யில், மழைக்காலங்களில் சேறாக மாறி விடுகிறது. முக்கிய பேருந்து நிலையம் உள்ள பகுதி இப்படி சேறும் சகதியு மாய் இருப்பது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தனர்.