districts

img

1,149 குளம், குட்டைகளில் தண்ணீர் இருப்பு குறித்து ஆய்வுக் கூட்டம்

திருப்பூர், நவ.16 - திருப்பூர் மாவட்டத்தில் 4179.94 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள 1,149  குளம், குட்டைகளில் தண்ணீர் இருப்பு  குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிலத்தடி நீரை மேம்படுத்துவது, மழை நீரை குளம், குட்டைகள், பொதுக் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறு களில் நீர் செறிவூட்டும் திட்டக்குழு ஆலோசனை கூட்டம் தமிழ் வளர்ச்சி மற் றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் வியாழ னன்று நடைபெற்றது. இதில், திருப்பூர்  மாவட்டத்திலுள்ள திருப்பூர், அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கேயம், ஊத் துக்குளி, வெள்ளகோவில், மூலனூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், பொங்கலூர், குண்டடம் மற்றும் குடிமங் கலம் ஆகிய 13 ஊராட்சி ஒன்றியங்க ளில், 4179.94 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள 1,149 குளம், குட்டைகளில் தண் ணீர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. மேலும், மழை நீர் சேகரிப்பு  மற்றும் ஓடைகள் பராமரிப்பு குறித்தும்,  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1478  பொதுக்கிணறுகள் மற்றும் 1410 ஆழ்கு ழாய் கிணறுகளின் விவரங்கள் குறித் தும், காங்கேயம் ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்ட பாலசமுத்திரம்புதூர், படியூர் சிவன்மலை, கீரனூர், மரவப் பாளையம், ஆலம்பாடி, பரஞ்சேர்வழி, மருதுறை மற்றும் நத்தக்கடையூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள  குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டு வது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது.  இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கார்திகேயன் உட் பட தொடர்புடைய அலுவலர்கள் பலர்  கலந்து கொண்டனர்.