கலைத் திருவிழா போட்டிகள்: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
திருப்பூர், நவ.16- திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 2024-2025ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெள்ளியன்று துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் கலைத் திருவிழா போட்டிகள் வெள்ளிக்கிழமை 6 முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியர்க்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் 18ஆம் தேதி ஜெய்வாபாய் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நி லைப் பள்ளிகளில் பாட்டு, நடனம், ஓவியம் வரைதல், களிமண் சிற்பம் உருவாக்குதல் முதலான போட்டிகள் நடைபெற உள்ளன. ஜெய்வாபாய் பள்ளியில் 569 மாணவ, மாணவி களும், நஞ்சப்பா பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு 695 மாணவ, மாணவிகளும் போட்டிகளில் கலந்து கொள்கின்ற னர். மேலும், ஜெய்வாபாய் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 522 மாணவ மாணவிகளும், நஞ்சப்பா பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு 899 மாணவ மாணவிகளும் கலைத் திரு விழா போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இப்போட்டி களில் வெற்றி பெறும் மாணவ, மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவார்கள். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் எஸ்.ராமமூர்த்தி, துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியன் உட்பட மாவட்ட கல்வி அலுவலர் கள், ஆசிரியர்கள், பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தொடர்பு டைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
சபரிமலைக்கு திருப்பூர் மார்க்கமாக மூன்று சிறப்பு ரயில்
திருப்பூர், நவ.16- கார்த்திகை முதல் தேதி சனியன்று தொடங்கியது. இதை முன்னிட்டு தமிழ் நாடு மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங் களில் இருந்து ஏராளமானோர் சபரி மலை செல்ல தயாராகி வருகின்றனர். இதற்காக தெற்கு ரயில்வே சார்பில் திருப்பூர் மார்க்கமாக செல்லக்கூடிய வகையில் 3 சிறப்பு ரயில்களை அறி வித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வா கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கச்சேகுடா - கோட்டயம் சிறப்பு ரயில் நவம்பர் 17 மற்றும் 24ஆம் தேதிக ளில் ககச்சேகுடாவில் இருந்து மதியம் 12:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.30 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும். இது ஈரோட்டில் 9.50 திருப்பூரில் 10.43, கோவையில் 11.35 மணிக்கு நின்று செல்கிறது. இதே போல் கோட்டயத்தில் இருந்து கச்சே குடாவிற்கு நவம்பர் 18 மற்றும் 25 ஆம் தேதிகளில் கோட்டயத்திலிருந்து முதல் நாள் 10:50 மணிக்கு புறப்பட்டுமறுநாள் மதியம் 1 மணிக்கு சென்றடைகிறது. இது திருப்பூரில் அதிகாலை 3:43 மணிக்கு நின்று செல்கிறது. நவம்பர் 19 மற்றும் 26 ஆம் தேதிகளில்ஹைதராபாத் கோட்டயம் சிறப்பு ரயில் இயக்கப்ப டுகிறது. ஹைதராபாத்தில் இருந்து முதல் நாள் மதியம் 12 மணிக்கு புறப் பட்டு திருப்பூரில் மறுநாள் காலை 9:13 மணிக்கு நின்று கோட்டயத்திற்கு மாலை 4:10 மணி அளவில்சென்று சேர்கி றது. இதேபோல் கோட்டையத்திலி ருந்து ஹைதராபாத்துக்கு நவம்பர் 20 மற்றும் 27 ஆகியதேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது முதல் நாள் மாலை 6:10 மணிக்கு கோட்டயத் தில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் மறுநாள் அதிகாலை 1:18 மணிக்கு நின்று இரவு 11:45 மணிக்கு ஹைதராபாத் சென்றடைகிறது. இதேபோல் ஹைதரா பாத்தில் இருந்து கோட்டயம் செகந்திரா பாத்வரையிலான சிறப்பு ரயில் நவம்பர் 22 மற்றும் 29 ஆம் தேதிகளில் இயக்கப்ப டுகிறது. ஹைதராபாத்தில் இருந்து மதி யம் 12.05 மணிக்கு புறப்பட்டு திருப்பூ ரில் மறுநாள் காலை 10:33 நின்று மாலை 6:45 மணிக்கு கோட்டயத்தைச் சென்ற டைகிறது. இதேபோல் கோட்டயத்தில் இருந்து செகந்திராபாத் வரையிலான சிறப்பு ரயில் நவம்பர் 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கோட்டயத்திலிருந்து இரவு 9:45 மணிக்குபுறப்பட்டு இது இரண் டாம் நாள் அதிகாலை 4:13 மணிக்கு திருப் பூரில் நின்று, மூன்றாம் நாள் அதிகாலை 12:05 க்கு செகந்திராபாத் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச போட்டோ பிரேம் லேமினேஷன் பயிற்சி
திருப்பூர், நவ.16- திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கின்ற ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு, திருப்பூர் அனுப்பர் பாளையத்தில் உள்ள கனரா வங்கி யின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் முற்றிலும் இலவ சமாக போட்டோ பிரேம் லேமினேஷன் மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி கற் றுத் தரப்படுகிறது. பத்து நாள் முழு நேர பயிற்சிகளை கற்றுக்கொள்ள பயிற்சி யாளர்கள் சேர்க்கை நடைபெற்று வருகி றது. மேலும் பயிற்சிக்கான நேர்காணல் வரும் திங்கட்கிழமை 18 ஆம் தேதி நடை பெற உள்ளது. எழுத படிக்கத் தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக் கலாம். பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. காலை மாலை தேநீர் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி யின் முடிவில் ஒன்றிய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பயிற்சிக்குப் பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோ சனைகள் வழங்கப்படும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத் திற்கு நேரில் வரவும், முதலில் வருபவ ருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி : 9489043923, 9952518441, 8610533436 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் என பயிற்சி நிலைய இயக்குனர் தெரிவித் துள்ளார்.
விவசாயிகள் சாலை மறியல்
கோவை, நவ.16- விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூலூரில் உண்ணாவிரத போராட் டத்தை தொடங்கிய விவசாயிகள் சாலை மறியலில் ஈடு பட்டனர். கோவை மாவட்டம், இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் தேவனஹல்லி (பெங்களூரு) வரை 270 கிலோ மீட்டர் தொலைவுக்கு பரந்து விரிந்து உள்ள இந்த திட் டத்தின் கீழ், கோவையில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவிற்கு விவ சாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கப் பட உள்ளது. இதனால், ஏராளமான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் என அஞ்சு கின்றனர். இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. இதனை அடுத்து சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், காலவரை யற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்திற்கான அடிப்படை வசதிகளை செய்ய போலீசார் அனுமதி மறுப் பதாக கூறி, திடீரென அங்கிருந்து கிளம்பிய விவசாயி கள், சந்தைப்பேட்டை சாலை வழியாக சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் திருச்சி சாலை நோக்கி முழக்கங் களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்று மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மறியலில் ஈடுபட்ட 125 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
சட்டவிரோத மது விற்பனை: தாபாக்களுக்கு சீல்
கோவை, நவ.16- கோவை புறநகரப் பகுதிகளில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட தாபாக்களுக்கு சீல் வைக்கப்பட் டன. கோவை புறநகரப் பகுதிகளான கோவில் பாளையம், அன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தேசிய நெடுஞ்சாலை களை ஒட்டி தாபா என்ற பெயரில் குடில் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தாபா உணவகங்களில் சட்ட விரோ தமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக தொடர் புகார்கள் எழுந் தன. இதனையடுத்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் மற் றும் கருமத்தம்பட்டி காவல் துணை கண்கா ணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடி சோதனை நடத்தப் பட்டது. போலீசார் நடத்திய சோதனையில் அன்னூர் பகுதியில் செயல்பட்ட 3 தாபாக் களில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு சட்ட விரோதமாக விற் பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந் தது. இதனைத் தொடர்ந்து மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று தாபாக்களையும் போலீசார் உதவியுடன் அன்னூர் வட்டாட்சியர் குமரி ஆனந்தன் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் பூட்டு போட்டு சீல் வைத்தனர். இதே போல மேட்டுப்பாளையம், கோவில் பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர் உள் ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த 10க்கும் மேற்பட்ட தாபாக்களுக்கு போலீசார் உதவியுடன் வரு வாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
தகுதிச்சான்று இல்லை: 127 வாகனங்கள் பறிமுதல்
சேலம், நவ.16- சேலம், தருமபுரியில் தகுதிச்சான்று இல் லாமல் இயக்கப்பட்ட லாரிகள் உட்பட 127 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ண கிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சாலை விபத் துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கை களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தொடர்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதித்து வருகிறன்றனர். அதன்படி, சேலம் சரகத்திலுள்ள சேலம், தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர், ஆத் தூர், வாழப்பாடி, தருமபுரி, அரூர், பாலக் கோடு உள்ளிட்ட பகுதிகளில் வேன்கள், லாரி கள், மினி லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் முறையான பர்மிட் உள்ளதா? என்றும், விதிமுறைகளுக் குட்பட்டு இயக்கப்படுகிறதா? என்றும் அவ்வப் போது சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகை யில், சேலம் சரகத்தில் கடந்த அக்டோபர் மாதத் தில் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அதி காரிகள் நடத்திய சோதனையில், அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிச்சென்ற வாக னங்களுக்கும், விதியை மீறி பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. விதிகளை மீறி இயக்கிய 1,189 வாகனங்களுக்கு ரூ.53 லட்சம் அபரா தம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்பட்ட லாரி உட்பட 127 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன, என்றனர்.
லாரி மோதி விபத்து: 3 இளைஞர்கள் பலி
நாமக்கல், நவ.16- பரமத்திவேலூர் அருகே சரக்கு ஆட்டோ வும், லாரியும் மோதிய விபத்தில் 3 இளை ஞர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட் டம், வெங்கரையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் ரமேஷ் (30). ஆட்டோ ஓட்டு நரான இவர், வெள்ளியன்று ஈரோடு அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு மணவரை அலங்காரப் பொருட்களை ஏற்றிச் சென்று, அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் இறக்கி வைத்து விட்டு மீண்டும் கபிலர்மலை நோக்கி வெள்ளியன்று நள்ளிரவு 2 மணியளவில் வந்து கொண்டிருந்தார். சரக்கு ஆட்டோவில் அலங்கார வேலைக்காகச் சென்ற சிறு கிணத்துபாளையத்தைச் சேர்ந்த மோகன் என்பரின் மகன் சக்திநாதன் (18), கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சிவா (19), அதேப் பகுதியைச் சேர்ந்த பூபதி என்ப வரின் மகன் பூமேஷ் (20), வெங்கரையைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் வந்துள்ளனர். ஜேடர்பாளையம் அருகே உள்ள தண்ணீர் பந்தல் அருகே வந்து கொண்டிருந்தபோது, பரமத்தியிலிருந்து ஜேடர்பாளையம் நோக்கி எதிரே வந்த லாரியும், சரக்கு ஆட்டோவும் எதிர் பாராத விதமாக மோதிக்கொண்டது. இதைய டுத்து அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த வர்கள், அவர்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சக்திநாதன் மற்றும் சிவா ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து படுகாயமடைந்த பூமேஷ், ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் மற்றும் சாமிநாதன் ஆகிய மூன்று பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சென்ற 3 பேரில், பூமேஷ் வரும் வழியில் இறந்து விட்ட தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சரக்கு ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் மற்றும் சாமிநாதன் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற னர். இவ்விபத்து குறித்து ஜேடர்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்து: பெண் உயிரிழப்பு
கோவை, நவ.16- மின்சாரம் தடைபட்ட நிலையில், ஜெனரேட்டருக்கு எண்ணை ஊற்றச்சென்ற பெண் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு, பெண் ஒருவர் உடல் கருகி உயிரிழந் தார். கோவை மாவட்டம், கணபதி பகுதியைச் சேர்ந்தவர் ராம லட்சுமி (85) என்பவர் வியாழனன்று உயிரிழந்தார். அவரது உடலை ஃப்ரீசர் பாக்ஸ் மூலம் வீட்டில் வைக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில், வெள்ளியன்று காலை திடீரென மின் சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஃப்ரீசர் பாக்ஸ் ஏசி கிடைக்காது என்பதால் உடனே ஜெனரேட்டர் மூலம் ஃப்ரீசர் பாக்ஸ் இருக்க கரண்ட் கொடுக்கப்பட்டது. அப்போது ஓடிக் கொண்டு இருந்த ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊத்தப்பட்ட தாக கூறப்படுகிறது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு புகைமண்டலம் ஏற் பட்டது. ராமலட்சுமி உடல் இருந்த அறையில் இருந்த உறவினர்கள் வெளியே ஓடினர். சிலர் ஒரு அறையில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பத்மாவதி, பானுமதி, ஶ்ரீராம், ராஜேஸ்வரன் ஆகிய 4 பேர் ஒரு அறையில் மாட்டிக் கொண்டனர். அவர்களை உறவினர்கள் கதவை உடைத்து மீட்டனர். தீக்காயம் அடைந்து போராடிக் கொண்டிருந்த 4 பேரையும் உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் பத்மாவதி (55) என்பவர் இறந்தார். மீதி மூன்று பேரும் சிகிச்சை பெற்று வரு கிறார்கள். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள்
கோவை, நவ.16- வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணி களை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம், நிர்மலா மகளிர் கல்லூரியில் நடை பெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் -2025 தொடர்பான சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி சனியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய தேர் தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோவை மாவட்டத்தி லுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 1,019 வாக்குச்சாவடி மையங் களில் உள்ள 2,201 நகரப்பகுதி வாக்குச் சாவடிகள், 916 ஊரகப் பகுதி வாக்குச்சாவடிகள் என மொத்தம் 3,117 வாக்குச்சாவ டிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் -2025 யினை முன்னிட்டு சனி மற்றும் ஞாயிறன்று (இன்று) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றது. பொதுமக்கள் மேற்கண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண் டும் என்றார்.
நில மோசடி செய்த 5 பேர் கைது
கோவை, நவ.16- ஆள் மாறாட்டம் செய்து ரூ.75 லட்சம் நில மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், சுந்தராபுரம் பகுதி யைச் சேர்ந்த விஜயகுமார். இவர் தனது அண்ணன் வேணுகோபால் உடன் சேர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு குறிச்சி பகுதியில் நிலம் வாங்கினார். பின்னர் அதில் இன்ஜினி யரிங் நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறு வனத்தை இரண்டு பேரும் சேர்ந்து கவ னித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு வேணுகோபால் நிறுவனத்தில் இருந்த போது கோவையைச் சேர்ந்த முபாரக் அலி என்பவர் அங்கு வந்தார். அவர் வேணு கோபாலிடம் தான் ரியல் எஸ்டேட் நடத்தி வருவதாகவும், இந்த இடத்தை தான் வாங்கி இருப்பதால் உடனடியாக நீங்கள் காலி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வேணு கோபால், விஜயகுமாருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். பின்னர் முபாரக் அலி அவரின் பெயரில் அந்த இடம் இருப்பதற்கான ஆவணங்களை காட்டிய பின் அங்கு இருந்து சென்று விட்டார். பின்னர் சில நாள்கள் கழித்து விஜயகுமாருக்கு முபா ரக் அலி தொடர்பு கொண்டு அந்த இடத் துக்கு தற்போதைய மார்க்கெட் விலை எவ்வ ளவோ அதை நீங்கள் என்னிடம் கொடுத்தால் அந்த இடத்தை உங்களுக்கே கிரயம் செய்து கொடுப்பதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு விஜயகுமார் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்று ஆவ ணங்களை சரிபார்த்தார். அப்போது 2022 ஆம் ஆண்டு பாக்கியம் என்பவரிடம் முபாரக் அலி அந்த இடத்தை வாங்கி இருப்பதாக இருந் தது. தன்னுடைய நிலம் வேறு ஒரு நபரின் பெயரில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயகுமார், இது குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். அதில் முபாரக் அலி, பாக்கி யம், சாந்தி, கௌதமன், நிஷார் அகமது ஆகி யோர் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டு போலி ஆவணங்களை தயாரித்து விஜயகுமாரின் நிலத்தை முபாரக் அலிக்கு விற்பனை செய்த தாக பத்திரப் பதிவு செய்தது தெரிய வந்தது. அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும். இதையடுத்து மோசடி செய்த ஐந்து பேரையும் போலீசார் கைது செய்த னர். மேலும், இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள வழக்குரைஞர் ஒருவரை தேடி வரும் போலீசார், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.