சென்னை, நவ. 16 - கீழ்ப்பாக்கம் அரசு மன நல மருத்துவமனையை தனியார்மயமாக்கும் சுகா தாரத்துறையின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் வடசென்னை மாவட்ட 14வது மாநாடு சனிக்கிழமையன்று (நவ.16) பெரியமேட்டில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், 150ஆண்டு கால பழமையான பொதுப் பணித்துறை பணிமனை பண்டகச் சாலையை தொடர்ந்து அதே இடத்தில் இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும், சென்னை மாநகராட்சி மண்டலங்களில், அடிப் படை பணிகளை தனி யாருக்கு கொடுக்கக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமுல்படுத்த வேண்டும், அரசுத்துறைகளில் காலி யாக உள்ள 30விழுக் காட்டிற்கும் மேற்பட்ட இடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியத்தை மீண்டும் தர வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர், கல்வித்துறை துப்புரவு பணியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் வே.விஜயகுமரன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர்களான ஜி.மகேந்திரன் வரவேற்க, ஜி.வேலு அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செயலாளர் அண்ணாகுபேரன் துவக்க வுரையாற்றினார். செய லாளர் அறிக்கையை செயலாளர் ம.அந்தோணி சாமியும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் த.ஏழுமலையும், மகளிர் அறிக்கையை அமைப்பாளர் ஜெ.சரஸ்வதியும் சமர்ப்பித்தனர். சிஐடியு மத்திய சென்னை மாவட்டத் தலை வர் எம்.தயாளன், அகில இந்திய கணக்கு கணக்கீட்டு சங்கத்தின் தலைவர் எம்.ரமேஷ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளர் கே. சத்தியநாதன், செங்கொடி சங்க தலைவர் ஜெ. பட்டாபி, அரசு ஊழியர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் த.முத்துக்குமாரசாமிவேல் உள்ளிட்டோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். சங்கத்தின் பொதுச் செய லாளர் ஆ.செல்வம் நிறை வுரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் வை.சிவக் குமார் நன்றி கூறினார். நிர்வாகிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவராக வே.விஜய குமரன், செயலாளராக ம.அந்தோணிசாமி, பொரு ளாளராக த.ஏழுமலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.