திருவண்ணாமலை,நவ.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவண்ணாமலை மாவட்ட 10வது மாநாடு சனிக்கிழமை (நவ.16) திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் செஞ்சட்டை பேரணியுடன் தொடங்கியது. திருவண்ணாமலை வேலூர் சாலை அருகில் உள்ள ஈசானிய மைதானம் அருகிலிருந்து துவங்கிய பேரணி வேங்கிக்கால் மின்வாரிய அலுவலகம் அருகில் முடி வடைந்தது. பின்னர் அங்கு நடை பெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். ராமதாஸ் தலைமை தாங்கி னார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.கனகராஜ், என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், மாவட்ட செய லாளர் எம்.சிவக்குமார் உள்பட பலர் பேசினர். முன்னதாக மாவட்டக்குழு உறுப்பினர் எம்.பாலாஜி வரவேற்றார். ஞாயிறன்று (நவ.17) என்.சங்கரய்யா நினைவுத்திடலில் (ஹேமலதா மணி திருமண மண்டபம்) பிரதிநிதிகள் மாநாடு துவங்குகிறது. மாவட்டச் செயலாளர் சிவக்குமார் வேலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். பின்னர் பிரதிநிதிகள் விவாதம் நடைபெறள்ளது. திங்கட்கிழமை வரை நடைபெற வுள்ள மாநாட்டில் நூல் வெளியீடு, கலை நிகழ்ச்சிகள், புத்தக கண்காட்சி, புகைப்பட கண்காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம் மாநாட்டில் மாவட்ட மக்களின் முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.