districts

img

மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சார இயக்கம்  

உடுமலை, நவ.16 - ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத  கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குடிமங்கலம், உடுமலை ஆகிய பகுதிகளில் பிரச்சார இயக் கம் நடைபெற்றது. ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் குடிமங்கலம் ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.மோகனசுந்தரம் தலை மையில் சனியன்று பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இப்பிரச்சார இயக்கம் குடிமங்க லம் ஒன்றியத்தில் சிக்கனூத்து ஊராட்சியில் துவங்கி, மூங்கில்தொழுவு, சிந்திலுப்பு, இலுப்பநகரம் மற்றும் பெதப்பம்பட்டி நால் ரோடு ஆகிய பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ச.சசிகலா மற்றும்  ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரங்கநாதன், விஜயகுமார், ஓம்பிரகாஷ், தங்கவேல் உட் பட திரளானோர் கலந்து கொண்டனர். அதேபோல் உடுமலை நகரக்குழு சார் பில் வெள்ளியன்று உடுமலையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. உடுமலை நகரச்  செயலாளர் கே.தண்டபாணி தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  எஸ். ஆர்.மதுசூதனன் பெரிய கோட்டை ஊராட்சி  சிவசக்தி காலனி பகுதியில் துவக்கி வைத்து  பேசினார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், நகரக்குழு உறுப்பினர்கள் தோழன் ராஜா, சக்திவேல், வசந்தி, ஜஹாங் கீர், பார்த்திபன் மற்றும் கிளைச் செயலா ளர்கள்  சுதாசுப்பிரமணியம், கணபதி, ராம சாமி, நடராஜ், தியாகு, ஜெகானந்தா, ரத்தின சாமி, ராஜன், சையது இப்ராஹிம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.