கோவை, மே 6- தேசிய கயிறு வாரியம் சார்பில் கோவை யில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை ஒன்றிய அமைச்சர்கள் நாராயண் ரானே மற் றும் பானு பிரதாப் சிங் வர்மா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கயிறு வாரி யம் ஒன்றிய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைப்புடன் இணைந்து கோவையில் தேசிய கயிறு வாரிய மாநாடு வியாழனன்று நடைபெற்றது. இதில் ஒன்றிய சிறு, குறு மற் றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே, இணை அமைச் சர் பானு பிரதாப் சிங் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சி யாக வெள்ளியன்று காலை ‘ரன் பார் காயர்’ என்ற முழக்கத்துடன் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை ஒன்றிய அமைச் சர்கள் நாராயண் ரானே மற்றும் பானு பிர தாப் சிங் வர்மா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.