districts

img

குப்பைகளால் நாற்றமெடுக்கும் இலக்கியம்பட்டி ஊராட்சி

தருமபுரி, செப்.6- தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி பஞ்சா யத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் குப்பைகள் அகற்றா மல் உள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.  தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகளில் மிக பெரிய ஊராட்சி   இலக்கியம்பட்டி. இந்த ஊராட்சி தருமபுரி நகரத்தை ஒட்டி  அமைந்துள்ளதால் நகரத்தை போலவே இருக்கும். இங்கு  உள்ள எந்த தெருவிலும் குப்பைகள் கொட்ட இடம் இல்லை.  இதனால் திறந்த வெளியில் குப்பைகளை கொட்டி செல் கின்றனர். ஊழியர்கள் பற்றாக்குறையின் காரணமாக குப்பை களை எடுப்பதற்கு பணியாளர்கள் யாரும் வருவதில்லை. மாத கணக்கில் குப்பைகளை எடுத்து செல்வதில்லை. இதனால் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆட்படுவதாக பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  எம்ஜிஆர் நகர், பிடமனேரி, நந்தி நகர், வெண்ணாம் பட்டி உள்ளிட்ட எந்த தெருக்களிலும் தினந்தோறும் குப்பை களை அகற்றுவதில்லை. இதேபோன்று மாரியம்மன் கோவில் தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், கடந்த சில நாட்களாக பெய்த மழை யால் தெருக்களில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.   இதனால் பாம்பு, பூச்சி உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் நுழைகிறது. மேலும் இத்தெருவில் உள்ளவர்கள் தேங்கி  நிற்கும் மழைநீரால் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.  இதனால் குழந்தைகள் முதியோர்கள் மிகவும் சிரமப்படு கின்றனர். எனவே, சுகாதார சீர்கேட்டுடன் திகழும் இலக்கியம் பட்டி ஊராட்சியில் சுகாதாரத்தை உறுதி செய்ய ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.