districts

img

பொதுத்துறை வங்கிகளை பாதுகாப்போம்: 4 ஆயிரம் கிமீ பிரச்சாரம்

மேட்டுபாளையம், ஜூலை 19- பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் கிராம வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண் டித்து மேட்டுப்பாளையம், சென்னை, கிருஷ் ணகிரி, தூத்துக்குடி ஆகிய நான்கு  முனை களிலிருந்து இந்திய வங்கி ஊழியர் சம் மேளனம் தமிழ்நாடு சார்பாக வங்கிகளை காப் போம் நாட்டை காப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சார பயணம் மேட்டுப் பாளையத்தில் துவங்கியது. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அகில இந்திய மாநாடு வருகிற ஆகஸ்ட் மாதம் 12 முதல் 14 வரை சென்னையில் நடைபெற உள் ளது. வங்கிகளை காப்போம் நாட்டை காப் போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து வங்கி கள் தேசியமயமானதின் 55 ஆவது ஆண்டில் தமிழ்நாட்டில், இந்திய வங்கி ஊழியர் சம் மேளனம் இந்த பிரச்சாரப் பயணத்தை ஜூலை 19 முதல் 22 வரை நடத்துகிறது. மேட்டுப் பாளையம், சென்னை, கிருஷ்ணகிரி, தூத் துக்குடி ஆகிய நான்கு முனைகளிலிருந்து புறப்படும் குழுக்கள் ஜூலை 22ஆம் தேதி திருச்சியில் நிறைவடைந்து, மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  

முன்னதாக இந்த பிரச்சார பயணத்தில், வங்கிகள் தனியார் மயமானால் சாதாரண மக்களின் வைப்புத்தொகை பாதுகாப்பாக இருக்காது, சேவை கட்டணம் உயரும், பொது துறை, கூட்டுறவு, கிராம வங்கிகள் இல்லாமல் போனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாவர். தனியார் வங்கிகள் லாபம் மட்டும் குறிக்கோளாய் கொண்டு பொதுமக் களை கசக்கி பிழியும், சாமானிய மக்களுக் கான கடன் முழுவதும் கைவிடப்படும், வங் கிப் பணியாளர் தேர்வில் வெளிப்படைத் தன்மை இருக்காது, பணி  நியமனங்களில் இட ஒதுக்கீடு இருக்காது உள்ளிட்ட நெருக்கடி கள் குறித்து தலைவர்கள் உரையாற்றினர்.  மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத் தில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சிக்கு சங் கத்தின் தலைவர் சிவலிங்கம் தலைமை ஏற் றார். அரசு ஊழியர் சங்க கோவை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் துவக்கி வைத் தார். பிரச்சார பயணத்தின் நோக்கங்களை விளக்கி இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ஆர்.மகேஸ் வரன் உரையாற்றினார். இதில், தமிழ்நாடு ஐபிஏ சங்க தலைவர் கணேசன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் பாபு ராதா கிருஷ்ணன், சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க மேட்டுப்பாளையம் தாலுகா பொதுச் செயலாளர் பாட்சா ஆகியோர் வாழ்த்தி பேசி னார். இதில், வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர்கள் என்.சுப்ரமணியம், எஸ்.ஏ.ராஜேந்திரன் மற்றும் இளையபாரதி, மயில்சாமி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.