திருப்பூர், ஜன.15- திருப்பூர் மாவட்டம் கணியூர் பேரூராட்சியுடன், ஜோத்தம்பட்டி ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்கு ளம் தாலுகாவிற்கு உட்பட்ட ஜோத் தம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர், தமிழ்நாடு விவசா யிகள் சங்க தாலுகா செயலாளர் எம். எம்.வீரப்பன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில் உள்ளிட் டோர் தலைமையில் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு வந்தனர். அவர்கள் ஜோத்தம்பட்டி ஊராட் சியை கணியூர் பேரூராட்சியுடன் இணைக்க கூடாது என்று வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இது பற்றி எம்.எம்.வீரப்பன் செய்தியாளரிடம் கூறியதாவது, ஜோத்தம்பட்டி ஊராட்சியை கணியூர் பேரூராட்சியுடன் இணைக்கும் அர சாணையை ரத்து செய்ய வேண்டும். இந்த ஊராட்சியில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் மிக, மிக வறிய நிலையில், 100 நாள் வேலை திட் டத்தை நம்பி வாழக்கூடியவர்கள். விளிம்பு நிலை மக்கள் அதிகம் வசிக் கின்றனர். பேரூராட்சியுடன் இணைக் கப்பட்டால் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப் படும். ஏற்கனவே ஊராட்சித் தலைவர் செந்தில் மூன்று முறை பேரூராட்சி உடன் இணைக்க கூடாது என்று தீர் மானம் நிறைவேற்றியுள்ளார். எனி னும் மக்களின் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக பேரூராட்சியுடன் இணைத்து இருப்பதை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஜோத்தம்பட்டி பேரூராட்சியில் வசிக்கும் 15 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் அனைவர் வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்போம். இம்மு டிவை கைவிடாவிட்டால் மடத்துக்கு ளம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடு வோம். எனவே ஜோத்தம்பட்டி ஊராட்சி தனியாக ஊராட்சியாகவே தொடர்ந்து செயல்படுவதை திருப் பூர் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் சார்பாக கேட்டுக் கொள்வதாக கூறினார்.