கோவை, மார்ச் 23- ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில், தமிழ்நாடு முழு வதும் உண்ணாவிரத இயக்கம் நடைபெற்றது. 01.04.2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக் கான ஊக்க ஊதிய உயர்வு ஆகிய வற்றை உடனடியாக வழங்க வேண் டும். சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதிய முரண் பாட்டை களைய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியர் கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன் றிய அரசுக்கு இணையான ஊதி யம் வழங்கப்பட வேண்டும், உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் ஞாயிறன்று தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத இயக்கம் நடைபெற்றது. அதன்ஒருபகுதி யாக கோவை மாவட்டம், சிவா னந்தா காலனியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஒருங் கிணைப்பாளர்கள் ச.ஜெகநாதன், சி.அரசு, க.சாலமன்ராஜ், அ.ராதா கிருஷ்ணன், மா.இராஜசேகரன், மு.கலைவாணன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோவை மாவட்டம் முழுவதும் இருந்து திர ளான ஆசிரியர்கள், அரசு ஊழி யர்கள் 300க்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர்.
ஈரோடு
ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட் டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் ச.விஜயமனோகரன், பி.சர வணன், அ.மதியழகன், பி.எஸ்.வீராகார்த்திக், அ.ஆறுமுகம் ஆகி யோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் நூற்றுக்கணக் கானோர் பங்கேற்றனர். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரத இயக்கத்திற்கு, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பா ளர்கள் எம்.சுருளிநாதன், பி.எம்.கெளரன், இராசா.ஆனந்தன், கே. பாஸ்கரன், இரா.பெஞ்சமின் ஆகி யோர் தலைமை வகித்தனர். இதில் அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் அண்ணா. குபேரன், ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் கோட்டை மைதானத் தில் நடைபெற்ற உண்ணாவிரத இயக்கத்திற்கு, ஜாக்டோ – ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமை வகித்தனர். மாநில ஒருங் கிணைப்பாளர் இலா.தியோடர் இராபின்சன் துவக்கவுரையாற்றி னார். இதில் துறைவாரியான சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற உண்ணாவிரதத் திற்கு, ஜாக்டோ – ஜியோ ஒருங் கிணைப்பாளர் முருக செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் 500க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.
ஓய்வூதியர்கள் ஆதரவு ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத இயக்கம் நடைபெற்றது. கோவை யில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பினர். முன்ன தாக, சங்கத்தின் நிர்வாகிகள் பேரணியாக சென்று போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் என். அரங்கநாதன், மாவட்ட நிர்வாகிகள் மதன், கே.அருணகிரி உட்பட பலர் பங்கேற்றனர்.