தருமபுரி, ஜூன் 14- பொம்மிடி அருகே பாயும் வேப்பாடி ஆற்றில் சேதமடைந்துள்ள தடுப்ப ணையை அகற்றிவிட்டு, புதிய தடுப் பனை கட்டித்தர வேண்டும் என விவசா யிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி வட்டம், கோட்டமேடு கிராமத்தில் உள்ள வேப்பாடி ஆற்றில் மழைக்கா லங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். வாணியாறு அணைக்கு செல்லும் இந்த தண்ணீரை தடுப்பணை கட்டி தேக்கி வைத்தால், அப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவ சாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், அப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையும் பூர்த்தி செய்யும். இத னால் வேப்பாடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட் டப்பட்டது.ஆனால், உரிய பராமரிப்பு இல்லா ததால் தற்போது இந்ததடுப்பணை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் தடுப்பணையில் தேங்குவதில்லை. தற்போது தண்ணீரின்றி தடுப்பணை பகுதி வறண்டு காணப்படுகிறது. எனவே, பழுதடைந்த தடுப்பணையை இடித்துவிட்டு, புதிய தடுப்பணை கட் டித்தர வேண்டும் என அப்பகுதி விவசா யிகளும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.