கோவை, பிப்.26- கடும் பனி மற்றும் உரிய விலை கிடைக் காதது, மாற்று விவசாயத்திற்கு செல்வது உள்ளிட்ட காரணங்களால் வாழை வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துள் ளது. கோவை மாவட்டம், சிறுமுகை, கார மடை, தொண்டாமுத்தூர், தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வாழைத் தார் மண்டிக்கு கொண்டு வரப்பட்டு விற் பனை செய்யப்படுகிறது. கோவையில் கடந்த 2 மாதங்களாக அதிகாலையில் பனி யும், பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயி லும் நிலவுகிறது. இதன்காரணமாக வாழை சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆர்.எஸ்.புரம் வாழைக்காய் மண்டிக்கு வாழைத்தார் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அனைத்து ரக வாழைப்பழங்களுக்கும் விலை உயர்வு ஏற் பட்டு உள்ளது. குறிப்பாக செவ்வாழை கிலோ ரூ.90 முதல் ரூ.120-க்கும், வாழைத் தார் ஒன்று ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை விற்பனையானது. இதுகுறித்து வாழைத்தார் மண்டி வியா பாரி சாதிக் பாஷா கூறுகையில், தற்போது பூவன் வாழை ரூ.25 - 30, ரஸ்தாளி ரூ.40 - 50, கற்பூரவள்ளி ரூ.40 - 45, நேந்தர வாழை ரூ.45 ஆக உள்ளது. ரமலான் நோன்பு துவங்க உள்ளதால், வாழையின் தேவை அதிகரிக் கும். வரும் காலங்களில் வர்த்தகம் அதிக ரிக்கும். பனி காலம் என்பதால் வரத்து குறைந்துள்ளது. அதனால் விலை அதிக ரித்துள்ளது, என்றார். வாழை விவசாயி பாபு ராமசாமி கூறுகை யில், தற்போது வாழை வரத்து குறைந்துள் ளது. விவசாயிகள் பாக்கு விவசாயத்தை நோக்கிச் செல்கின்றனர். குறிப்பாக சத்திய மங்கலம் பகுதியில் செவ்வாழை, கதனி, தேன்வாழை, கற்பூரவள்ளி சாகுபாடி செய் யப்படுகிறது. சமீபகாலமாக வாழை விவசா யம் குறைந்து வருகிறது. சரியான விலை கிடைப்பதில்லை, நல்ல விலை கிடைத்தால் தொடர முடியும், ஆதார விலை மட்டுமாவது கிடைக்க வேண்டும், என்றார். கடும் பனி மற்றும் வெயிலின் தாக்கத் தால் வாழை வரத்து குறைந்துள்ளதால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன் னும் ஒரு சில நாட்களில் ரமலான் காலம் துவங்க உள்ளதால், வாழை காய் விற்பனை அதிகமாகவும், மேலும் வாழை சீசன் துவங் கவுள்ளதால் வரத்து அதிகரிக்கும் அப் போது விலையும் குறையும் என வியாபாரி கள் தெரிவிக்கின்றனர். - கவி