districts

img

கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை, நகராட்சியுடன் இணைக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

ஈரோடு, ஜன.18- பெருந்துறை நகராட்சியுடன் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூ ராட்சியையும் இணைக்க வேண்டு மென வியாழனன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் செயல்படும் அனைத்து அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதி கள் மற்றும் பொதுநல அமைப்புக ளின் ஆலோசனைக்கூட்டம் வியாழ னன்று பெருந்துறை, மயூரா மஹா லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெருந்துறை மற்றும் கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சிகளை இணைத்து நகராட்சியாக்க வேண் டும் என்பது தான் இப்பகுதியில் செயல்படும் அனைத்து அரசியல் கட் சிகள் மற்றும் பொது மக்களின் நீண்ட  காலக் கோரிக்கையாகும். பெருந் துறை நீண்ட காலமாக தொகுதி ‌மற் றும் தாலுகா தலைமையிடமாகவும், வளர்ந்து வரும் தொழில் நகரமாக வும் விளங்கி வருகிறது. இங்கு 2700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் வளர்ச்சி மையம் அமைந்துள்ளது. பல்வேறு அரசு மற்றும் தனியார் கல் லூரிகளும், நிறுவனங்களும், செயல் பட்டு வருகின்றன. ஈரோடு - குன்னத்தூர் சாலையின் தெற்குப் பகுதி பெருந்துறை பேரூ ராட்சியாகவும், வடக்குப்பகுதி கரு மாண்டி செல்லிபாளையம் பேரூராட் சியாகவும் (சில இடங்களைத் தவிர)  அமைந்துள்ளது. இப்பேரூராட்சிக ளில் சுமார் 75 ஆயிரம் பேர் வசித்து  வருகின்றனர். இதுதவிர பல்லாயிரக் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலா ளர்களும் வசித்து வருகின்றனர். ஆகவே, பெருந்துறை நகரில் ஒருங் கிணைந்த முறையில் வளர்ச்சிப் பணி களை மேற்கொள்ள வசதியாக இரு பேரூராட்சிகளையும் இணைத்து நகராட்சியாக்க வேண்டும். மறு அறி விப்பு (அரசாணை) வெளியிட வேண் டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்திற்கு, இந்தியக் கம் யூனிஸ்ட கட்சியின் மாவட்ட துணைச்  செயலாளர் எஸ்.சின்னசாமி தலைமை வகித்தார். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், பெருந் துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஜெயக்குமார், பெருந்துறை பேரூ ராட்சித் தலைவர் ஓ.சி.வி.ராஜேந் திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிச்சாமி, திமுக சார்பில் பி. எஸ்.திருமூர்த்தி, அதிமுக சார்பில் அருள்ஜோதி கே.செல்வராஜ், காங் கிரஸ் சார்பில் வழக்குரைஞர் சி. காந்தி, கொமதேக மாவட்டத் தலை வர் காடை பாலு (எ) எஸ்.பாலசுப்பிர மணியம், விசிக மாவட்டப் பொருளா ளர் வி.விஜயபாலன் மற்றும் பெருந் துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.