மின்சாரம் தாக்கி கைகளை இழந்தவரின், பிள்ளைகளின் படிப்பிற்காக உதவிடுக
கோவை, ஜன.20- மின்சாரம் தாக்கி கைகளை இழந்த நபர், தனது மகன், மகளின் படிப்பிற்காக உதவ வேண்டும், எனக் கோரி கோவை ஆட்சியர் அலுவலத்தில் மனு அளித் தார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (40). இவர் 2008 ஆம் ஆண்டு அப்பகுதியில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில், அவரது இடது கை முற்றிலும் பறி போனது. வலது கை, கால்கள், வயிற்று பகுதிகளில் ப லத்த காயங்கள் ஏற்பட்டதை அடுத்து அந்த வேலையை விட்டுவிட்டு சுமைதூக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவியும் அங்கு உள்ள மில் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் 12 ஆம் வகுப்பும், மகன் தனியார் கல்லூரியிலும் படித்து வருகின்றனர். இந் நிலையில், தனது குழந்தைகளின் படிப்பு செலவிற்கு உதவ வேண்டும், எனக்கோரி திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
பண்ணை வீடு, தனி வீடுகளை கணக்கெடுக்க உத்தரவு!
சேலம், ஜன.20- சேலத்திலுள்ள பண்ணை வீடுகள், தனியாக உள்ள வீடுகளைக் கணக்கெ டுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் கௌதம் கோயல் உத்தரவிட்டுள் ளார். சேலம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல் துறையி னர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இரவு ரோந்து பணியை அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற் பார்வையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதில், மாவட்டம் முழு வதும் உள்ள பண்ணை வீடுகள், தனி யாக இருக்கும் வீடுகளில் கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடப்பதை தடுக்க, அத்தகைய வீடுகள் குறித்த கணக்கெடுப்பை நடத்த காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பணிக்காக ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் 2 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த காவல் நிலைய எல்லையில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்று தனியாக இருக்கும் வீடுகள், தோட் டங்களில் உள்ள பண்ணை வீடுகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி வரு கின்றனர். இத்தகைய வீடுகளில் கண் காணிப்பு கேமராக்களை பொருத்த போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அந்த வீடுகள் இருக்கும் இடத் துக்கு செல்லும் முக்கிய சாலை, தெருக் களில் எங்கெல்லாம் கண்காணிப்பு கேம ராக்களை பொருத்தினால் சரியாக இருக்கும் எனவும் கள ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண் காணிப்பாளர் கௌதம் கோயல் கூறு கையில், பண்ணை வீடுகள், தனி வீடு களில் திருட்டு உள்ளிட்ட சம்பவங்க ளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்த கைய வீடுகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி வருவதன் மூலம், அங்கெல்லாம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டு வருகிறது. மேலும், அவசர உத விக்கு காவல் நிலைய தொலைபேசி எண், காவல் அதிகாரிகளின் கைப்பேசி எண்களை வழங்கி வருகிறோம். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.
அணைப்பகுதியில் குப்பைக்கழிவுகள்!
அணைப்பகுதியில் குப்பைக்கழிவுகள்! உதகை, ஜன.20– மார்லிமந்து அணையை சுற்றி குப்பைக்கழிவுகள் கொட் டப்படுவதால், குடிநீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, மேல்கோடப்ப மந்து உள்ளிட்ட 7 தடுப்பணைகளிலிருந்து நகராட்சி பகுதிக ளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், மார்லி மந்து அணையிலிருந்து 10 வார்டுகளுக்கு குடிநீர் விநியோ கிக்கப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதிக்கிடையே தடுப்பணை உள்ளதால், திறந்த வெளியில் போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. வெளி நபர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுகளை தடுப்பணை அருகே கொட்டுகின்றனர். தடுப்பணையை ஒட்டிய இடத்தில் குப்பைக்கழிவுகள் குவிந்துள்ளதால், மழைக்காலத்தில் கழி வுகள் அணைக்குள் அடித்து செல்வதால் குடிநீர் மாசடை கிறது. எனவே, தடுப்பணையை சுற்றி தடுப்பு அமைக்க நக ராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்ப குதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தொழில் வரியை முறைபடுத்த மாநகராட்சி முடிவு: வரவேற்பு
கோவை, ஜன.20- ரன்னிங் லைசென்ஸ் மற்றும் தொழில் வரியை முறைபடுத்த கோவை மாநகராட்சி முடிவு செய் துள்ள நிலையில், மாநகராட்சி அதி காரிகளை தொழில் துறையினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த னர். கோவை மாநகராட்சி எல்லைக் குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக் கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் பெரிய ஆலைகள் அளிக்கும் ஜாப் ஆர்டர்களை பெற்று செயல்பட்டு வருகின்றன. கொரோனா தாக்கம், ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி, மூலப் பொருள் விலை உயர்வு, மின் கட் டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்தது. இந் நிலையில், மாநகராட்சி சார்பில் தனி யார் மூலம் தொழில் கூடங்களில் கள ஆய்வு செய்து, ரன்னிங் லைசென்ஸ் மற்றும் தொழில் வரி விதிக்கப்படுகிறது. இந்த கட்டணம் குறுந்தொழில் துறைக்கு கூடுதல் சுமையாக உள்ளது. இதை முறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் உள்ளிட்ட தொழில் அமைப்பினர், மாநகராட்சி நிர்வாகத்தை வலியு றுத்தி வருகின்றனர். இந்நிலையில், திங்களன்று மாநகராட்சி துணை ஆணையர் சுல்தானா முன்னிலையில் தொழில் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. மாநக ராட்சி பிரதான அலுவலக வளாகத் தில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் உயர் மின் அழுத்த இணைப்பு பெற்றுள்ள குறுந் தொழில் நிறுவனங்கள் 10 எச்.பி வரை ஆண்டுக்கு ரூ.300, 20 எச்.பி வரை ஆண்டுக்கு ரூ.600, 30 எச்.பி. வரை ஆண்டுக்கு ரூ.900 மற்றும் 40 எச்.பி வரை ஆண்டுக்கு ரூ.1400 ரன்னிங் லைசென்ஸ் மற்றும் தொழில் வரியாக செலுத்த வேண் டும் என இறுதி செய்யப்பட்டு அதில் உடன்பாடு ஏற்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில் தமிழ்நாடு கைத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் தலைவர் ஜேம்ஸ், பொதுச்செயலாளர் பிர தாப் சேகர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதன்பின் செய்தியாளர்க ளிடம் பேசிய ஜேம்ஸ், கோவை மாந கராட்சியில் கடந்த சில மாதங்க ளாக தனியார் பங்களிப்புடன் தொழில் துறையினருக்கு ரன்னிங் லைசென்ஸ் மற்றும் தொழில் வரி நியமிப்பது மூலமாக கடும் நெருக் கடி கொடுத்து வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் துறையினர் மாநகராட்சி ஆணை யரை ஜன.21 ஆம் தேதியன்று நேரில் சந்தித்து பெருந்திரள் இயக் கம் நடத்த முடிவு செய்திருந்தோம். இதனிடையே மாநகராட்சி அதிகா ரிகள் எங்களை அழைத்து கோரிக் கைகள் குறித்து கேட்டறிந்தனர். அதன் அடிப்படையில் தற்போது குறுந்தொழில் முனைவோர்கள் பெரும் சுமைகளை ஏற்படுத்திய இக்கட்டணம் தற்போது முறைப்ப டுத்த மாநகராட்சி அதிகாரிகள் ஒப் புக் கொண்டுள்ளனர். மேலும், எங்க ளது கோரிக்கைகளையும் ஏற்று ரன்னிங் லைசென்ஸ் மற்றும் தொழில் வரியை எளிமையாக்கு வது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். அதற்கு நாங்கள் மாந கராட்சி அதிகாரிகளை நேரில் சந் தித்து நன்றி தெரிவித்தோம். மேலும், ஜன.21 ஆம் தேதியன்று (இன்று) நடைபெற இருந்த பெருந் துறை இயக்கத்தை கைவிட முடிவு செய்துள்ளோம். அதேபோல், விரைவில் இதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப் பிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதனடிப் படையில் மண்டல வாரியாக முகாம்கள் அமைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உள்ளோம். மேலும், ஆளுங்கட்சி மூலம் எந்த அழுத்தமும் எங்களுக்கு வர வில்லை. எங்களுக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எதுவும் கிடை யாது. தொழில் துறையினர் எங்கள் கோரிக்கைகளை அரசிடம் வைப் போம் நிறைவேற்றவில்லை என் றால் தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து 7 நாட்களில் 70 ஆயிரம் பேர் பயணம்
கோவை விமான நிலையத்தில் இருந்து 7 நாட்களில் 70 ஆயிரம் பேர் பயணம் கோவை, ஜன.20- பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, கோவை விமான நிலையத்தில் இருந்து கடந்த 7 நாட்களில் 70 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, தில்லி, மும்பை உள்ளிட்ட உள் நாட்டின் பல்வறு நகரங்களுக்கும், அபுதாபி, ஷார்ஜா, சிங்கப் பூர் ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படு கிறது. தினமும் 30 முதல் 32 விமானங்கள் வரை இயக்கப்படு கின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன.13 ஆம் தேதியன்று முதல் 19 ஆம் தேதி வரை பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. கடந்த ஏழு நாட்களி்ல் மட்டும் 70 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். 250 - க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் விமான பயணிகள் எண் ணிக்கை அதிகமாக இருக்கும். இவ்வாண்டு பொங்கல் விடு முறையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் கடந்த 7 நாட்களில் 70 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டு உள்ளனர். சில நாட்கள் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயணம் மேற் கொண்டனர். பொங்கல் மற்றும் பொங்கலுக்கு மறுதினம் பய ணிகள் கூட்டம் 9 ஆயிரத்தை ஒட்டி காணப்பட்டது. அதிக பட்சமாக ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் தினதன்று மட்டும் 34 விமானங்கள் இயக்கப்பட்டன, என்றனர்.
மூதாட்டியை கொலை செய்த நபர் கைது
மூதாட்டியை கொலை செய்த நபர் கைது கோவை, ஜன.20- வால்பாறை அருகே மூதாட்டியை கொலை செய்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர். கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள ரொட்டிக் கடை லோயர் பாரளை பகுதியில் தனியார் எஸ்டேட் நிறுவ னத்திற்கு சொந்தமான தொழிலாளர் குடியிருப்பில் சரோஜினி (72) என்பவர் வசித்து வந்தார். வால்பாறைக்கு பென்சன் பணம் வாங்க வந்த சரோஜினி, அவரது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் அவரை தாக்கியதில் சரோஜினி உயிரிழந்தார். இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பா ளர் சுரேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மூன்று பேரை சந்தேகத்தின் பெய ரில் பிடித்து விசாரணை நடத்தியதில், லோயர் பாரளை எஸ்டேட் தொழிற்சாலை அருகில் குடியிருந்து வரும் ரங்கநாதன் (24) குடிபோதையில் சரோஜினி வீடு அருகே மரம் வெட்ட சென்றுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரோ ஜனியை, ரங்கநாதன் தான் வைத்திருந்த அரிவாளால் தலை யில் தாக்கியுள்ளார். இதனால், மயக்கமடைந்த அவரை தூக்கிக்கொண்டு வீட்டில் உள்ளே போட்டுவிட்டு சென்று விட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சரோஜினி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து ரங்கநாதன் மீது போலீ சார் திங்களன்று கொலை வழக்குப்பதிவு செய்து, நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
நூதன முறையில் சாலை விழிப்புணர்வு
நூதன முறையில் சாலை விழிப்புணர்வு சேலம், ஜன.20- சேலத்தில் போக்குவரத்து காவல் துறையினர் எமதர்மன் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற் படுத்தினர். கடந்த 2023 ஆம் ஆண்டு சேலம் மாநகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 217 பேர் உயிரிழந்தனர். கடந்த 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் 232 பேர் உயிரிழந்துள்ளனர். 789 பேர் காயமடைந்தனர். இதனால் சாலை விபத்தை குறைக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் தலைக் கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது கடுமையான அபரா தம் விதித்தும், எச்சரிக்கை செய்தும் போலீசார் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆண்டு தோறும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இந் தாண்டு சாலை பாதுகாப்பு வார விழா ஜன.20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சாலை பாது காப்பு வார விழாவையொட்டி, திங்களன்று சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல் காவல் துணை ஆணை யாளர் ரவிச்சந்திரன் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடாஜலம் உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர். அப்போது, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணி யாமல் வந்த நபர், விபத்து ஏற்பட்டு கீழே விழுந்து தலை யில் அடிபட்டு உயிரிழப்பதை போன்றும், அங்கு காத்திருந்த எமதர்மராஜா கயிறை போட்டு உயிரைப் பறிக்கும் விதமாக தத்ரூபமாக நடித்த காட்சி பொதுமக்களிடையே மிகுந்த வர வேற்பை பெற்றது.