districts

img

வன விலங்குகளால் ரூ.10 கோடி விளைப் பொருட்கள் சேதமானதாக கூறி உடுமலை வன அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

உடுமலை, நவ.5- உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் கடந்த 10 ஆண்டு களில் ரூ.10 கோடிக்கு மேல் மதிப் புள்ள விளைப் பொருட்களை வனவி லங்குகள் சேதப்படுத்தி உள்ளதாகக்  கூறி, தமிழக அரசு உடனடியாக வன  விலங்குகளைக் கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி உடுமலை யில் உள்ள மாவட்ட வன அலுவல கத்தில் செவ்வாயன்று விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட் டனர். வனப்பகுதி எல்லையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் விவசாய நிலங் களை வன விலங்குகள் சேதப்ப டுத்தி வருகிறது. குறிப்பாக இனப்பெ ருக்கம் அதிகமாக இருக்கும் காட்டுப்  பன்றியைக் கட்டுப்படுத்த வேண்டும்.  வன எல்லையில் தென்னை மரங் களை சேதப்படுத்தும் குரங்குகள் மற் றும் யானைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இது வரை வனவிலங்கு கள் சேதப்படுத்திய விளைப் பொருட்க ளின் மொத்த மதிப்பு ரூபாய் 10 கோடிக்கும் மேல் இருக்கும். கடந்த 2019 ஆம் ஆண்டு உடுமலையில் போராட்டம் நடத்தியபோது, காட் டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுக்கப்பதாக மாவட்ட ஆட்சி யர், வனத்துறை அதிகாரிகள் உறுதி யளித்தனர். ஆனால் இன்று வரை  ஏதும் செய்யவில்லை என செவ்வா யன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்த னர். இதையடுத்து பேசிய மாவட்ட வன அலுவலர் தேவேத்திரகுமார் மீனா, விவசாயிகள் தங்கள் குறை களைத் தெரிவிக்க வனச்சரக அலுவ லகத்தில் மாதந்தோறும் 5ஆம் தேதி  குறைதீர் கூட்டம் நடைபெறும். விவ சாயிகளுக்கு வனவிலங்குகளால் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக  தீர்வு காணப்படும். மேலும், விளைப் பொருட்களை சேதப்படுத்தும் போது இழப்பீடு குறித்து விவசாயிக ளிடம் கலந்து ஆலோசனை மேற் கொள்ளப்படும். விவசாயிகள் மற் றும் பொதுமக்கள் மீது கடந்த  இரண்டு ஆண்டுகளாக வனவிலங்கு களை தாக்கியதாக வழக்கு பதிவு  செய்யவில்லை. மாறாக விலங்கு களை வேட்டையாடிய நபர்கள் மீது தான் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இம்மாத இறுதி யில் வனவிலங்குகள் குறித்த பிரச்ச னைக்கு தீர்வு காணப்படும் என் றார்.