உதகை, செப்.10- எமரால்டு அணையின் உபரி நீரை திறக்க உள்ளதால், கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவ மழை தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, அவலாஞ்சி, எமரால்டு, பைக் காரா, அப்பர் பவானி போன்ற அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், எமரால்டு அணைகளில் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணையின் கொள்ளளவான 145 அடியை எட்டிய நிலையில், அணைக்கு வினாடிக்கு 300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்புக் கருதி மாவட்ட நிர்வாகம் அணைகளில் இருந்து 430 கன அடி நீர் திறந்து விடப் பட்டது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரை யோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக இந்தாண்டு தென்மேற்கு பருவமழை 100 சதவீதத்திற்கும் அதிகமாக தாண்டி பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருவதோடு, நீர்நிலைகளும் நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.