districts

img

திருப்பூரில் தீபாவளி பண்டிகை ஆர்டர்

திருப்பூர், செப்.18- தீபாவளி பண்டிக் கையை முன்னிட்டு திருப்பூ ரில் உள்ள பனியன் நிறுவ னங்களுக்கு ஆர்டர் வரத் தொடங்கியுள்ளதாக தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள் ளனர்.  பின்னலாடை நகரமான திருப்பூரில் உள்நாட்டுக்கு தேவையான ஆடை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என கோடிக்கணக்கான ரூபாய்க்கு உற்பத்தி நடப்பதால் டாலர்  சிட்டி என அழைக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வரை உள்நாட்டு ஆடை வர்த்தகம் நடக்கிறது. குறிப் பாக உள்ளாடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் அதிகம்  உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்ப டுகிறது. பண்டிகை காலங்களில் உள்நாட்டு ஆடை உற்பத்தி  அதிகம் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக தீபாவளி, ரம் ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களுக்கு வெளிமாநிலங் களில் இருந்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்க ளுக்கு ஆர்டர் கொடுப்பது வழக்கம்.  இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால்,  மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி போன்ற மாநி லங்களில் இருந்து ஆர்டர் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலை யில் பீகார், ஒடிசா தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டு  சென்று கொண்டிருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்,  பண்டிகைக் கால ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கும் நிலை யில் தொழிலாளர் சொந்த ஊர் செல்வதால் கவலை கொள்வ தாக உற்பத்தியாளர்கள் கூறினர். இதுகுறித்து சொந்த மாநி லம் செல்லும் தொழிலாளரிடம் விசாரித்தபோது, பீகார்  மற்றும் ஒடிசா மாநிலங்களில் நிலம் சீரமைப்பு பணி நடைபெ றுவதாவும், உரிமையாளர்கள் வரும் 30 ஆம் தேதிக்குள் கையெழுத்திட வேண்டுமென அரசு காலக்கெடு நிர்ணயித் துள்ளதாக கூறப்படுகிறது.