மனுக்களை மாலையாக அணிந்து தர்ணா! சேலம், ஜன.20- தங்களுக்கு சொந்தமான லாரியை நான்கு வருடமாக தராமல் ஏமாற்றி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி அரசு அதிகாரிகளிடம் அளித்த மனுவை மாலை யாக அணிந்து சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக் கப்பட்ட குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள தேவன கவுண்டர் பகுதியைச் சேர்ந்த பாத்திமா மேரி (51) மற்றும் அவரது மூன்று பெண் மகள்களான பிரியா (30), முத்தழகி (26), கோகிலா (19) ஆகியோர் திங்களன்று ஆட்சியர் அலு வலகத்திற்கு வந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் வாக னத்தின் அருகில், ஏற்கனவே வழங்கப்பட்ட ஏராளமான மனுக்களை மாலையாக அணிந்து கொண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரியை சந் திக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரியை சந்தித்து மனு அளித்துவிட்டு, பாத்திமா மேரி செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது கணவர் குழந்தைசாமி, கடந்த 2018 ஆம் ஆண்டு லாரி ஒன்றை விலைக்கு வாங்கி தொழில் செய்து வந்தபோது, அவரது நண்பர்களான அருள் பிரகாஷ், சந்திரமோகன் ஆகிய இருவரும் லாரியை குத்தகைக்கு தந்தால் மாதம் ஒரு லட் சம் ரூபாய் தருவதாகக்கூறி, கடந்த 2021 ஆம் ஆண்டு லாரியை பெற்றுக்கொண்டு இரண்டு மாதம் பணத்தை தந்தனர். இதன்பிறகு பணத்தை தராமல் ஏமாற்றி வந்த நிலையில், இதுகுறித்து கேட்டபோது காரணங்களை சொல்லி தட்டிக் கழித்து வந்தனர். தொடர்ந்து பணத்தை கேட்டபோது, லாரி மற்றும் பணத்தை தர முடியாது என்றும், புகாரளித் தால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதுகுறித்து சங்ககிரி காவல் நிலையத்தில் புகார ளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால், மூன்று பெண் குழந்தைகளை வைத்து என்னால் குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தி எங்களை ஏமாற்றி லாரியை பெற்றுக் கொண்டு பணத்தையும் தராமல் கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும், எங்களுக்கு சொந்தமான லாரியையும் மீட்டுத் தர வேண்டும், என்றார்.