கோவை, நவ.5- திருச்சியில் செவிலியர் மீது கொலை வெறி தாக்குதல் மற்றும் பாலியல் வன் கொடுமை செய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவையில் எம்.ஆர்.பி செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம், ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி முடித்து வீடு திரும்பிய செவிலியர் மீது கொலை வெறி தாக்குதல் மற்றும் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப சுகா தார நிலையங்களில் இரவு நேரங்களில் பணி செய்யும் செவிலியர்களுக்கு பாது காப்பு வழங்க வேண்டும். தொடர்ந்து அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத் தப்படுவதை கண்டித்தும், பணியிடங்க ளில் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், அரசு ஊழியர் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, எம்ஆர்பி செவிலியர் சங்க மாவட் டச் செயலாளர் சே.தங்கமுனீஸ்வரி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெகநா தன், கிராம சுகாதார செவிலியர் சங்க பொதுச்செயலாளர் மாநில பிரகலதா, மாநில துணைத்தலைவர் சாந்தி, மாநில இணைச்செயலாளர் ஜமுனா ராணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் செந்தில்குமார், எம்ஆர்பி செவிலி யர் சங்க நிர்வாகி ஏஞ்சலின் ஆர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.