திருப்பூர், செப். 14 - தமிழக மின்வாரியத்தில் 56 ஆயிரம் காலி பணியிடங் களை ஒப்பந்த ஊழியர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பிஇ பட்டம் பெற்றவர்களைக் கொண்டு நிரப்பிட வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. திருப்பூர் மின் திட்டக் கிளை சார்பில் திருப்பூர் பி.என்.ரோடு மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பாக செவ் வாய்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திட்டத் தலைவர் பி.பாபு தலைமை வகித்தார். இதில் சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், திருப்பூர் மின் திட்டச் செயலாளர் ஆர்.நாகராஜன் ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்திப் பேசினர். மின்சார சட்டம் 2022ஐ வாபஸ் பெற வலியுறுத்தியும், காலி பணியிடங்களை நிரப்பவும், தரமான தளவாடப் பொருட் களை தடையின்றி வழங்கிடவும், அரசு ஊழியர்களுக்கு ஜன வரி 2022 முதல் வழங்கிய அகவிலைப்படியை வழங்கி டவும், அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்வதுடன், பதவி உயர்வு மூலம் பணியிடங்களை நிரப்பவும், பிரிவு அலுவ லகங்களில் காலியாக உள்ள பகுதி நேர பணியிடங்களை உட னடியாக நிரப்பவும், அனைத்து பிரிவுகளுக்கும் எரியிழை வழங்கவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்கவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் மின் வாரிய ஊழியர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். முடி வில் திட்டப் பொருளாளர் கே.மோகன்தாஸ் நன்றி கூறினார்.