districts

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் பி.செந்தில், மாவட்டப் பொருளாளர் நடராஜ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத்  தலை வர் கே.ராமசாமி, மாவட்ட மகளிர் அமைப்புக்குழு அமைப்பாளர்  ஏ.பிரகலாதா, வருவாய்த் துறை ஊழியர் சங்க மாவட்ட பொரு ளாளர் சையது உசேன், நெடுஞ்சாலைப்  பணியாளர் சங்க மாநில  செயற்குழு உறுப்பினர் கே.அய்யாசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.