districts

img

பூட்டிக்கிடக்கும் அம்மா திருமண மண்டபம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட சிபிஎம் மனு

பொள்ளாச்சி, அக்.4- பூட்டியே கிடக்கும் அம்மா திருமண மண்டபம் மக்கள்  பயன்பாட்டிற்கு திறந்து விடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளித் துள்ளனர். கோவை - பொள்ளாச்சி பிரதான சாலையில் ஆட்சிப்பட்டி  ஊராட்சிக்குட்பட்ட தில்லைநகர் பகுதியில் உள்ள அம்மா திரு மண மண்டபம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து 7 ஆண்டு களாகிறது. இது தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட் டிற்கு வழங்கப்படவில்லை. இடைப்பட்ட ஓராண்டு காலத்தில்  பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகமாக தற் காலிமாக இயங்கியது. அதன் பின்னர் தற்போது வரை எந்த  பயன்பாடும் இன்றி பூட்டப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதி ரூ.2 கோடி செலவில் காட்டப்பட்ட இந்த திரு மண மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆச்சிப் பட்டி கிளை சார்பில் வலியுறுத்தப்பட்டது. இது சம்பந்த மாக கடந்த 2 அம் தேதியன்று கிராம சபை கூட்டத்திலும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வெள்ளி யன்று மாவட்ட சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை  சந்தித்து மனு அளித்தனர். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆச்சி பட்டி கிளைச் செயலாளர் எஸ். மாதேஸ்வரன், பொள் ளாச்சி தாலுகா குழு உறுப்பினர் கே.மகாலிங்கம் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க பொள்ளாச்சி தாலு காச் செயலாளர் கே.ஏ.பட்டீஸ்வர மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.