districts

img

நாடு பலவீனப்படும்- ப.சிதம்பரம் எச்சரிக்கை

சென்னை, டிச.18- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் என்.ஆர்.சி., சி.ஏ.பி.  இரண்டு சட்டமும் இருக்காது  என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தந்தி  டி.வி.க்கு அளித்த சிறப்பு  பேட்டியில் திருத்தப்பட்ட குடி யுரிமை சட்டம் தொடர்பாக கூறுகையில், “இந்த சட்டம் தேவையில்லாதது. மத்திய பாஜக அரசால் இந்த சட் டத்தை கொண்டுவரவே முடி யாது. நாடு முழுவதும் கடு மையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. எதிர்ப்பது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல இந்துக்களும் ஏற்கவில்லை. அவர்களும் போராடுகிறார் கள். தேவையில்லாத இந்த  சட்டத்தால் நாடு பலவீனப்ப டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் என்.ஆர்.சி., சி.ஏ.பி.  இரண்டு சட்டமும் வராது.  இதை கட்சியை கலந்து ஆலோ சிக்காமல் நான் உறுதியா கவே சொல்கிறேன். நிச்சய மாக வராது” என்றார்.