திருப்பூர், ஜன.20 - காங்கேயம் பகுதியில் வெறிநாய்களால் ஆடுகள் கொல் லப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். காங்கேயம் வட்டம், சிவன்மலை அருகில், இராமபட்ட ணம் கிராமம் பெரிய தோட்டத்தில் விவசாயி கு.ரத்தினசா மிக்கு சொந்தமான பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்துள் ளார். இந்த பட்டியில் புகுந்த தெரு நாய்கள் 5 ஆடுகளை கடித்துக் கொன்றுள்ளன. மேலும், 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலத்த காயமடைந்துள்ளன. இப்பகுதிகளில் வெறிநாய்க ளால் ஆடுகள் பலியாகும் சம்பவம் தொடர்கதையாக உள் ளன. இதனால் விவசாயிகள் கடும் துன்பத்திற்கு ஆளாகி வரு கின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்தவும், உயிரி ழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயியை ஞாயிறன்று சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயியை சந்தித்த தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், காங்கேயம் தாலுகா நிர்வாகிகள் பி.வேலுச்சாமி, ஆர்.செல்வராஜ் ஆகி யோர் விசாரித்து ஆறுதல் கூறினர்.