கோவை, நவ.6- சாலைப் பணியாளர்களில் தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்கு, ஊதிய மாற்றம் வழங்க வேண்டும் என சாலைப் பணியாளர் சங்கத்தினர் சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி பணிக் காலமாக முறைப்படுத்திட வேண் டும். சாலைப்பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்க்குரிய ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். இளைஞர்க ளின் வேலை வாய்ப்பை பறிக்கும், மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணை யத்தை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் கோவையில் மண்டல அளவில் சங்கு ஊதி போராட்டத் தில் ஈடுபட்டனர். கோவை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இப் போராட்டத்திற்கு, சங்கத்தின் கோட் டத் தலைவர்கள் பொள்ளாச்சி எம். வெற்றிவேல், நீலகிரி எம்.ராஜேந்தி ரன், கோபி என்.முருகவேல் ஆகி யோர் தலைமை வகித்தனர். ஆர்.முருகன் வரவேற்றார். இதில், சங் கத்தின் மாநிலத் தலைவர் மா.பால சுப்பிரமணியன், கோட்டச் செயலா ளர்கள் பொள்ளாச்சி சா.ஜெகநா தன், கோபி ஆர்.கருப்பசாமி, கோவை பி.முருகன், நீலகிரி கே. இளங்கோவன் உள்ளிட்டோர் உரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ரவி வாழ்த்தி பேசினார். முடிவில், வி.சின்ன மாரிமுத்து நன்றி கூறி னார். இதில், ஏராளமான சாலைப் பணியாளர்கள் பங்கேற்றனர். சேலம் நெடுஞ்சாலைத்துறை சேலம் கோட்ட அலுவலகம் முன்பு மண்டல அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாவட் டத் தலைவர்கள் சேலம் மு.தங்க ராஜ், கு.தேவன், நாமக்கல் ஜாகிர் உசேன், சுப்பிரமணியன், தருமபுரி சிவகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாநி லச் செயலாளர் சு செந்தில்நாதன் கலைவாணன் அந்தோணி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்டச் செயலாளர்கள் திம்மரசு (கிருஷ்ணகிரி), பா.ரவி (நாமக்கல்), சா.அண்ணாதுரை (தரு மபுரி), நா.ராஜேந்திரன் (சேலம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.