districts

img

மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனம் பணத்தை பெற்று தர நீதிமன்றத்தில் குவிந்த புகார்தாரர்கள்

கோவை, டிச. 12 –  பண மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்திடமிருந்து பணத்தை திரும்ப பெற்று தரக்கோரி நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் விண் ணப்பங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் புகார் மனுவை அளித்தனர். கோவை பீளமேடு பகுதியில் செயல்பட்டு வந்த யுனிவர்சல் டிரே டிங் சொல்யூசன்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு கூடுதல் வட்டி கொடுப்பதாக விளம்பரம் செய் ததை தொடர்ந்து ஆயிரக்கணக் கான பொதுமக்கள் இதில் முதலீடு செய்தனர். ஆரம்பத்தில் சில மாதங் கள் முறையாக வட்டி தொகையை வழங்கி வந்த அந்த நிறுவனம், பின் னர் அதனை கொடுக்காமல் இழுத் தடித்து உள்ளது. மேலும் இதன் கிளைகள் பல்வேறு இடங்களில் மூடப்பட்டது.  இதனை தொடர்ந்து முதலீடு  செய்தவர்கள் விசாரித்தபோது, அந்த நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனால்  பாதிக்கப்பட்டவர்கள் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடமிருந்து பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது விசா ரணையில் தெரியவந்தது. இதனை யடுத்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் மற்றும் அவ ரது பங்குதாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், பாதிக்கப்பட்டவர்க ளுக்கு பதினோரு கோடி ரூபாயை 6 மாதத்திற்குள் திரும்ப வழங்க  வேண்டும்என உத்தரவிட்டது. நிதி  நிறுவனத்திடம் இருந்து பாதிக்கப் பட்ட மக்களுக்கு பணத்தை  பெற்றுத் தருவதற்காக அதன்  பொறுப்பை சட்டப்பணிகள்  ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டு அதன் அலுவலகத்தில் தனி அறை திறக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப் பிக்குமாறு பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் மூலம் தகவல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கள்  நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவல கத்தில் நீண்ட வரிசையில் காத்தி ருந்து புகார் மனு விண்ணப்பத்தை  அளித்தனர்.