திருப்பூர், நவ.5 - அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கிய பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத் திருப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வந்தது. இரண்டாம் நாளான செவ்வாயன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சங்க நிர்வா கிகளின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக மாவட்ட திட்ட அலுவலர் உத்தர வாதம் அளித்ததை அடுத்து காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு 2024ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பணியிட மாறுதல் வழங்கினார். அந்த ஆணை அடுத்த ஒரு வாரத்தில் அக்டோபர் 7ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கான மாத ஊதியமும் வழங்கப்படவில்லை. எனவே பணியிட மாறுதல் வழங்கப்பட்ட இடத்திற்கே மீண்டும் பணி வழங்க வேண் டும். கூடுதல் பொறுப்பு பார்த்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு மூன்று நாட்களுக்கு ஊதி யம் பிடித்தம் செய்யப்பட்டத் தொகையை வழக்க வேண்டும். உடனடியாக காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்க மாவட்டத் தலைவர் சி.சித்ரா தலைமையில் திங்கட்கிழமை இரவு முழுவ தும் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற் றது. இந்நிலையில் செவ்வாயன்று மாவட்டத் திட்ட அலுவலர் க.மகாலட்சுமியுடன், தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி. டெய்சி, மாநிலத் தலைவர் எஸ்.ரத்தின மாலா மாவட்டச் செயலாளர் கே.சித்ரா, சிஐ டியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பணி மாறுதல் வழங்கப்பட்ட அதே இடத்திற்கு டிசம்பர் மாதம் மீண்டும் பணி மாறு தல் வழங்கப்படும். கடந்த அக்.8 ஆம் தேதி பணி மாறுதலில் சேர்ந்த 65 பேருக்கு இன் னும் இரண்டு தினங்களில் முழு ஊதியம் வழங்கப்படும் என்று திட்ட அலுவலர் மகா லட்சுமி உறுதியளித்தார். இதையடுத்து செவ்வாயன்று 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்த காத்திருப்பு போராட் டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.