பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
அவிநாசி, நவ.24- திருப்பூர் மாவட்டம், அவிநாசி, கைகாட்டிபுதுாரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவ னத்தில், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 150 பெண் தொழிலாளர்கள் அங்குள்ள விடுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நிர்மலா (27), என்ற பெண் தொழிலாளி விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். இதன் முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட பெண் தொழிலாளி நிர்மலா கடந்த 22 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக பணிக்கு செல்லவில்லை என்றும், மறுநாள் பணிக்கு சென்ற அவரை, விடுமுறை எடுத் ததற்காக அவரது பிரிவு மேற்பார்வையாளர் திட்டி பணிக்கு அனுமதிக்காமல் விடுதி அறைக்கே சென்றுவிடுமாறு கூறி யதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிர்மலா அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சக பெண் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், நிர்மலா தூக்கிட்ட விவரத்தை காவல்துறையினரிடம் தெரிவிக்காத நிறுவனத்தினர், அவர்களே சடலத்தை மீட்டு மருத்துவ மனைக்கு எடுத்து சென்றதும் தெரியவந்தது. ஆகவே, இவ ரது தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து
அவிநாசி, நவ.24- பெங்களுருவில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிக ளுடன் தமிழ்நாடு அரசு சொகுசு பேருந்து ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இப்பே ருந்து புதனன்று அவிநாசி அருகே வந்தபோது திடீ ரென ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 5 பெண்கள் உட் பட 13 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அவிநாசி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டுமனை பட்டா கேட்டு சிபிஎம் மனு
உடுமலை, நவ.24- வீடு இல்லா ஏழை மக்க ளுக்கு தமிழக அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங் கக்கோரி உடுமலை வட் டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். உடுமலை தாலுகா, குடி மங்கலம் ஒன்றியம், கோட்ட மங்கலம் ஊராட்சியில் நூற் றுக்கும் மேற்பட்ட ஏழை விவ சாய தொழிலாளர்கள் மற் றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந் நிலையில் அவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று உடு மலை வட்டாட்சியரிடம் அறு பதுக்கும் மேற்பட்ட பொது மக்கள் மனு அளித்தனர். இதில், மார்க்சிஸ்ட கம் யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சசிகலா, மாவட் டக்குழு உறுப்பினர் ரங்க நாதன், கூட்டுறவு சங்கத் தலைவர் வெங்கிடுபதி உள் ளிட்ட திரளான பொதுமக் கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.