districts

img

சிஐடியு போக்குவரத்து தொழிலாளர்

தருமபுரி, ஜூன் 13- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக  ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில்,  ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற்கூட் டம் நடைபெற்றன. ஓய்வுபெற்ற ஊழியர்களை வெறுங்கையுடன் வீட்டிற்கு அனுப் பக்கூடாது. ஓய்வுபெற்ற ஊழியர்க ளுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப் படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்தப் பலன்களை ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண் டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை முறைப்படுத்த வேண்டும்.

தேர்தல் வாக்குறுதி அடிப்படையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட  வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்து, சமூக நீதியை சீர் குலைக்கும் ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி புறநகர் பணிமனை முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவ ரத்து கழக ஊழியர் சங்கத்தின் கிளைத் தலைவர் முனுசாமி தலைமை வித்தார்.

பொறுப்பாளார் பி.எம்.வெங்கடேசன் முன்னிலை  வகித்தார். மத்திய சங்க இணைச் செயலாளர் ஜே.முருகன், துணைத் தலைவர் என்.மனோண்மணி, செயல் தலைவர் சி.ரகுபதி ஆகி யோர் கலந்து கொண்டனர். இதே போன்று, தருமபுரி நகர் கிளை பணி மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் துணைத்தலை வர் சரவணன் தலைமை வகித்தார். இதில் செயலாளர் ராமமூர்த்தி, மண் டலப் பொதுச்செயலாளர் சண்மு கம், துணைத்தலைவர் சிவலிங் கம், இணைச்செயலாளர் கோவிந்த ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

சேலம்

சேலம் மாவட்டம், ஓமலூர் போக்குவரத்து பணிமனை முன்பு உண்ணாவிரத வாயிற்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிஐ டியு அரசு போக்குவரத்து கழக ஊழி யர் சங்கத்தின் ஓமலூர் கிளைத் தலைவர் கந்தசாமி தலைமை வகித் தார். இதில், சங்கத்தின் சேலம் மண் டலச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் செம்பான், துணை பொதுச்செயலாளர் செந்தில், சிஐ டியு மாவட்டப் பொருளாளர் வி.இ. இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.