திருப்பூர், செப்.18 - பஞ்சாலைத் தொழி லாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.24 ஆயிரம் வழங்க வலியுறுத்தி உடு மலையில் சிஐடியு பஞ் சாலைத் தொழிலாளர் சங்கத் தினர் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடத்தினர். உடுமலைபேட்டை போடிபட்டி திரு மூர்த்தி மில் அருகில் ஞாயிறன்று நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதில், ஓய்வு பெறும் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு அவர்கள் பெற்று வந்த சம்பளத்தில் பாதி அல்லது ரூ.9 ஆயிரம் குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். 480 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இஎஸ்ஐ, பி.எப்., சட்ட உரிமைகள் வழங்க வேண்டும். பெருமுதலாளி களுக்கு ஆதரவாக திருத்தப்படும் தொழிலாளர் சட்டத் தொகுப்பை கைவிட வேண்டும். விடுதி தொழி லாளர், வெளி மாநிலத் தொழிலாளர் களை கொத்தடிமை போல் வேலை வாங்குவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு பஞ்சாலைத் தொழி லாளர் சங்கத் தலைவர் கே.பழனிச்சாமி, பொதுச் செய லாளர் சி.ஈஸ்வரமூர்த்தி, பொருளாளர் எஸ்.ஜெயப்பிரகாஷ், துணைத் தலைவர் ஏ.சண்முகம், செயலாளர் எம்.செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.